ஆரோக்கிய உணவு

மூளைக்குப் பலம் தரும் தாமரை!

தாமரையில் வெண்தாமரை, செந்தாமரை இரண்டுமே மருத்துவக்குணம் கொண்டவை. பொதுவாக தாமரைப்பூ இனிப்பு, துவர்ப்புச்சுவை மற்றும் குளிர்ச்சித் தன்மை நிறைந்தது. உடல் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சி உண்டாக்கக்கூடியது.

வெண்தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் தேன், சர்க்கரை சேர்த்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் காதுகேளாமை மற்றும் ஆண்மைக்குறை போன்றவை நீங்கும். பூவை சர்பத் செய்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம், சீதபேதி, ஈரல் நோய்கள், இருமல் போன்றவை குணமாகும். மேலும் மூளைக்கு பலம் தரக்கூடியது இது. வெண்தாமரைப்பூவை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு சரியாகும். பூ இதழ்களை நன்றாக உலர்த்தி பொடி செய்து ஒன்றரை தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து சாப்பிட்டாலும் ரத்தக்கொதிப்பு மற்றும் இதயம் தொடர்பான கோளாறுகள் சரியாகும்.
தாமரை விதையை மையாக அரைத்து பால் சேர்த்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். கர்ப்ப காலங்களில் சில பெண்களுக்கு பசியே எடுக்காது. அதுபோன்ற காலகட்டங்களில் எலுமிச்சைப்பழ அளவு வெண்தாமரைப்பூவை நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
வெண்தாமரையின் விதைகளைப் பொடித்து 2 கிராம் அளவு சாப்பிட கொடுத்துவந்தால் உடலுக்கு வலிமை தரும். விதைகளை தேன் விட்டு அரைத்து நாக்கில் தடவினால் வாந்தி, விக்கல், நிற்கும். வெண்தாமரைப்பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், ஞாபகசக்தியைத் தூண்டி நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது.
வெண்தாமரைப்பூவை பயன்படுத்துவது போலவே, செந்தாமரைப்பூவையும் பயன்படுத்தலாம். ஆனால், செந்தாமரைப்பூ இதழ்கள், சீந்தில் கொடி, நெல்லிமுள்ளி, காசினிக்கீரை, சுக்கு, திப்பிலி போன்றவற்றை பாலில் கொதிக்கவைத்து நெய் சேர்த்து லேகியம் செய்யலாம். இது கண்ணுக்கும், மூளைக்கும் சிறந்த டானிக்காகும்.
வெண்தாமரை அல்லது செந்தாமரை எதுவாக இருந்தாலும் அதன் இலை, தண்டு, கிழங்கு இவை ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்து, அரைத்து (வகைக்கு 100 மில்லி அளவு) சாறு எடுத்துக்கொள்ளவும். அத்துடன் சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். எண்ணெய் கொதித்து சிவப்பு நிறமாக மாறும்போது நறுமணம் வீசும். அப்போது அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி வாரம் ஒருமுறை குளித்து வந்தால் கண்பார்வை சீராகும்.p19a

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button