ஆரோக்கியம் குறிப்புகள்

முடி உதிர்தலை தடுக்கத் தேவையான முக்கிய 6 உணவுகள் எவை ? ஆய்வுகள் கூறியவை!!

முடி உதிர்தலுக்கு சுற்றுபுற சூழ் நிலை முக்கிய காரணம். குளிர்காலத்தில் நிலவும் அதிகப்படியான குளிரால் வறட்சி அடைந்து முடி உதிர்தல் ஏற்படலாம்.
அது போல நீங்கள் ஊட்டச்சத்து குறைவாக சாப்பிட்டாலும் முடி உதிர்தல் உண்டாகும். முடி உதிர்தலை தடுத்து நிறுத்தும் ஆற்றல் நாம் எடுத்துக் கொள்ளும் சில வகை உணவுகளுக்கு உண்டு. அவற்றை என்னென்ன என்று பார்க்கலாம்.

சால்மன் மீன் :
சால்மன் அதிக புரொட்டின் நார்சத்து கொண்டவை. இவை நாம் மற்றும் கூந்தல் வளர தேவையான கெரட்டினை உற்பத்தி செய்ய தேவைஉயான சத்து. இது சால்மனில் இருப்பதால் அதனை சாப்பிடுவது ஸ்மார்ட்டான காரியம். வாரம் ஒருமுறையாவது சாப்பிட்டு பாருங்கள். கூந்தல் சருமம் இரண்டுமே ஆரோக்கியமானதாக இருக்கும்.

தேன் : குளிர்காலத்தில் உபயோகப்படுத்த வேண்டிய உணவு. இது உடலுக்கு தேவையான வெப்பம் தருவதோடு, ஈரப்பதத்தையும் தக்க வைக்கிறது. அடர்த்தியான கூந்தல் வளத்தை தேன் தருவதாக ஒரு ஆய்வு கூறியிருக்கிறது.

நட்ஸ் : வால் நட், ஆளி விதை எண்ணெய் மற்றும் நட்ஸிலிருந்து பெறப்படும் எண்ணெய்களும் கூந்தலை வளரச் செய்யும். தினமும் நட்ஸ் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்தல் நின்று போகும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒயிஸ்டர் : முடி உதிர்தலை நிறுத்தச் செய்யும் ஜிங்க் ஒரு சூப்பர் சத்து என்று சொல்லலாம். அளவுக்கு அதிகமாக முடி உதிர்தல் உண்டாகும் 50 பேர்களுக்கு ஜிங்க் சப்ளிமென்ட்ரி தந்து ஆய்வு செய்தபோது. அவர்களுக்கு முடி உதிர்தல் நின்று ஆரோக்கியமான முன்னேற்றம் வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முட்டை, சூரிய காந்தி எண்ணெய், வால் நட், பட்டானி, கடலைப் பருப்பு ஆகிய்வற்றில் அதிகம் ஜிங்க் உள்ளது.

எண்ணெய் : பூசணி எண்ணெய், ரோஸ்மெரி, தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய்வை முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் எண்ணெய் வகைகளாகும்.

பசலைக் கீரை : ஒரு ஆய்வில் பெண்களுக்கு முடி உதிர்தலுக்கு இரும்புச்சத்து மற்றும் விட்டமின் டி2 குறைபாடும்தான் காரணம் என தெரிய வந்தது. இரும்புச் சத்து அதிகமுள்ள பசலைக் கீரையை சாலட் மற்றும் பொறியலாக அடிக்கடி சாப்பிட்டு வாருங்கள். பிறகு சொல்லுங்கள் இன்னும் உங்களுக்கு முடி உதிர்தல் இருக்கா என்று.

13 1484287540 nuts

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button