ஆண்களுக்கு

ஆண்களுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளும்… அதற்கான இயற்கை நிவாரணிகளும்…

பெண்களின் சருமத்தை விட ஆண்களின் சருமம் 30 சதவீதம் கடினமானது. ஆண்களின் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பி பெண்களை விட 5 மடங்கு அதிகமாக எண்ணெயை வெளியேற்றும். இருப்பினும் ஆண்களுக்கு வயதாகிவிட்டால், சருமம் மிகவும் வேகமாகவும், ஆழமாகவும் சுருக்கமடைந்துவிடும்.

இக்கட்டுரையில் ஆண்களுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளும், அதற்கான சில இயற்கை நிவாரணிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து, அதன்படி சரும பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால், விரைவில் குணமாகும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தினமும் ஷேவிங் தினமும் ஷேவிங் செய்தால், சருமம் அதிக வறட்சிக்கு உள்ளாகும். மேலும் சருமத்தில் சிறு சிறு சீழ் நிறைந்த பருக்களாக இருக்கக்கூடும். இதனைத் தவிர்க்க, குளித்து முடித்த பின், வெள்ளை வினிகர் கலந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

ரேசர் காயங்கள்/எரிச்சல் ஷேவிங் செய்யும் ஆண்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் ரேசர் காயங்கள்/எரிச்சல். இப்படி இருக்கும் போது ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் வைத்து, எரிச்சல் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுங்கள். இதனால் எரிச்சல் குறைந்துவிடும்.

வெயிலால் ஏற்படும் காயம்/எரிச்சல் ஆண்கள் வெயிலில் அதிகம் சுற்றுவதால், சருமத்தில் காயங்கள்/எரிச்சல் இருக்கும். இதனைத் தவிர்க்க மோரை காயம் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ சரியாகும்.

ரோஸாசியா ரோஸாசியா என்னும் சரும பிரச்சனையால், சருமம் சிவந்தும், சீழ் நிறைந்த சிறு சிறு பருக்களுடனும் இருக்கும். இப்பிரச்சனைக்கு நீரில் கலந்த வெள்ளை வினிகர் அல்லது க்ரீன் டீ யைக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியைக் கழுவ வேண்டும்.

ஸ்ட்ரெட்ச் மார்க் ஆண்களுக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படும். அதுவும் அக்குள் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் தழும்புகள் இருக்கும். இதனை மறைக்க விளக்கெண்ணெய், கற்றாழை ஜெல் மற்றும் முட்டை வெள்ளைக்கருவை ஒன்றாக கலந்து, தழும்புகள் உள்ள இடத்தில் தடவி காய வைத்து கழுவ வேண்டும்.

அந்தரங்க அரிப்புகள் பெரும்பாலான ஆண்கள் அந்தரங்க பகுதியில் கடுமையான அரிப்புக்களை சந்திப்பார்கள். இந்த அரிப்பைப் போக்க ஆப்பிள் சீடர் வினிகர் கொண்டு தினமும் அந்தரங்க பகுதியைக் கழுவ அரிப்புக்கள் அடங்கும்.

முகப்பரு சில ஆண்களுக்கு முகத்தில் பருக்கள் அதிகம் வரும். இந்த பரு பிரச்சனையைப் போக்க, டீ-ட்ரீ ஆயில், க்ரீன் டீ, ஆல்பா ஹைட்ராக்ஸில் அமிலம் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், முகப்பருக்கள் வருவது குறையும்.

Related posts

ஆண்களே! முகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க…

nathan

உள்ளாடை அணிவதில் தினந்தோறும் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்!!!

nathan

யாருக்கெல்லாம் விறைப்பு பிரச்சினை ஏற்படும்?

sangika