தலைமுடி சிகிச்சை

முடி வளர்ச்சியை பாதிக்கும் காரணங்கள் மற்றும் நீங்கள் செய்ய வேண்டியவை !!

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி அடர்த்தியாகவும்,அழகாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு.முடியை சுத்தமாகவும்,ஆரோக்கியமாகவும் பராமரிக்க வேண்டும். முடியை எப்படி பராமரிப்பது என்று தெரியாமலேயே சிலர் முடியின் பொழிவை அழிக்கின்றனர்.நமக்கே தெரியாமல் நாம் செய்யும் சில தவறுகள் முடியின் பொலிவை அழிக்கின்றது.

முடி உதிர்தல், பொடுகு போன்ற காரணங்களால் சிலர் தூக்கத்தையும் தொலைக்கின்றனர்.உங்கள் தவறுகளை திருத்தி முடி வளர நீங்கள் செய்ய வேண்டியவைகள் என்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

1.முடியை சுத்தம் செய்யும் முறை: நம்மில் பலர் மார்க்கெட்டில் கிடைக்கும் அதிக கெமிக்கல் உள்ள ஷாம்பு உபயோகிக்கின்றனர்.இந்த வகை ஷாம்பு முடியை சுத்தம் செய்து பளபளப்பாகவும்,வளர்ச்சியை தூண்டும் என்று நம்புகின்றனர். ஆனால் இது தவறு இதற்கு பதிலாக இயற்கையான அதிக கெமிக்கல் கலக்காத ஷாம்பூ உபயோகிக்கலாம்.இது முடியை சுத்தமாகவும், ஆரோக்கியமானதாகவும் வைக்கிறது.

2.ஈர முடியில் சீப்பு உபயோகித்தல்: ஈரமான தலையில் சீப்பு உபயோகிப்பதன் மூலம் நல்ல ஆரோக்கியமான மற்றும் புதிதாக வளரும் முடிகள் கூட ஸ்கல்ப்பில் இருந்து உதிர்ந்து விடும்.

3.புளோ ட்ரயிங் (Blow drying): முடியை உலர்த்துவதற்கு நவீன முறையில் கருவிகள் உபயோகிக்கின்றனர் (Hair dryer).இந்த கருவிகள் முடியை சீர்படுத்த முடியாத பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது.மென்மையான டவல் கொண்டு முடியை உலர்த்தலாம்.

4.முடிச் சாயம் : முடிக்கு விதவிதமான கலர்களில் சாயங்கள்,ஜெல்,கிரீம் போன்ற அதிகப்படியான கெமிக்கல் கலந்த பொருள்கள் உபயோகிப்பதன் மூலம் முடியின் ஆரோக்கியம் கெடும்.இவை அனைத்தையும் தவிர்த்தாலே போதுமானது.

5.கண்டிஷனரை தவிர்த்தல்: முடியை ஈரப்பதமாகவும்,பளபளப்பாகவும் வைப்பதற்கு நல்ல தரமான கண்டிஷனர் உபயோகப்படுத்த வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும்போது மாசுகள் மூலம் முடி அதிக அளவு பாதிப்படைவதை கண்டிஷனர் உபயோகிப்பதன் மூலம் தடுக்கலாம்.

6.நீளமான முடி: நீளமான முடி அழகாக இருக்கும் ஆனால் ஸ்கல்ப்-ல் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி முடி உதிர்வை ஏற்படுத்தும்.நீளமான முடிக்கு பராமரிப்பு மிகவும் முக்கியமானது.முடியை சீராக வெட்டி தினமும் அலசி பராமரிக்க வேண்டும்.
18 1484734574 2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button