சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் சிப்ஸ்

பன்னீர் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பன்னீர் சிப்ஸை மாலையில் ஸ்நாக்ஸாகவும், மதிய உணவுக்கு சைடிஷாகவும் செய்து கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் சிப்ஸ்
தேவையான பொருட்கள் :

பன்னீர் – 150 கிராம்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
தந்தூரி பொடி – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1/2 கப்
சோள மாவு – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* பன்னீரை நீளமாக விரல் வடிவில் வெட்டிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் பன்னீர் அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், உப்பு, சோள மாவு, கரம் மசாலா தூள், இஞ்சி, பூண்டு விழுது, தந்தூரி பொடி, சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த பன்னீரை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

* சூப்பரான பன்னீர் சிப்ஸ் ரெடி.201705311306474274 how to make paneer finger chips SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button