32.1 C
Chennai
Sunday, May 11, 2025
meen 3135127f
அசைவ வகைகள்

அயிரை மீன் குழம்பு

அயிரை மீன் குழம்பு

என்னென்ன தேவை?

அயிரை மீன் – அரை கிலோ

வெந்தயம் – அரை டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 10

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 2

பூண்டு – 4 பல்

புளி – 25 கிராம்

மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

மல்லித் தூள் – 4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

தேங்காய்ப் பால் – அரை தம்ளர்

கறிவேப்பிலை – சிறிதளவு

நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சட்டியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெந்தயம் போட்டுத் தாளியுங்கள். அதனுடன் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு போட்டு நன்றாக வதக்குங்கள். அதில் தக்காளியை விழுதாக அரைத்துச் சேருங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து, பொன்னிறமாகும்வரை வதக்குங்கள். பிறகு 25 கிராம் புளியைக் கரைத்து ஊற்றி மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்ததும் அயிரை மீன்களைப் போட்டு, ஐந்து நிமிடம் குறைந்த தீயில் கொதிக்கவிடுங்கள். பிறகு தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கிவையுங்கள். கடையில் விற்கிற மசாலாவைவிட வீட்டில் அரைத்த மசாலாவைப் பயன்படுத்தினால் சுவை கூடும்.meen 3135127f

Related posts

மொச்சை நெத்திலி கருவாட்டு குழம்பு

nathan

புதினா ஆம்லேட்

nathan

பிரியாணி மசாலா மீன் வறுவல்

nathan

அவித்த முட்டை பிரை

nathan

சுவையான மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா

nathan

நண்டு பிரியாணி.! செய்வது எப்படி.!

nathan

மட்டன் சுக்கா வறுவல் செய்ய….!

nathan

இறால் ப்ரை &கிரேவி

nathan

கணவாய் மீன் தொக்கு செய்வது எப்படி

nathan