wgv3ivC
சிற்றுண்டி வகைகள்

விருதுநகர் புரோட்டா

என்னென்ன தேவை?

மைதா – 1 கிலோ
கடலை எண்ணெய் – 500 மி.லி
உப்பு – தேவையான அளவு


எப்படிச் செய்வது?

முதலில் மைதாவில் தேவையான உப்பு போட்டு, எண்ணெய், தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். குறைந்தது ஒரு மணிநேரம், அதிகம் 3 மணிநேரம் ஊறவிட வேண்டும். பின் சிறு உருண்டைகளாக உருட்டி, அதன் மீது எண்ணெய் ஊற்றி ஊற விட வேண்டும். பின்னர் வெள்ளை துணியை தண்ணீரில் நனைத்து உருண்டைகளை மூடிவைக்கவும். பின்னர் உருண்டைகளை எண்ணெயில் நனைத்து விசிறி போல வீசி, அதை கயிறு போல் திரித்து வட்டமாக செய்து கொள்ள வேண்டும். அதையும் ஈரத்துணியை போட்டு மூடி வைக்கவும். தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி அதில் வட்டமாக உருண்டைகளை தட்டி எண்ணெய் போட்டு இருபக்கமும் பொன்நிறமாக வரும் வரை பொரித்து எடுத்தால் எண்ணெய் புரோட்டா ரெடி.wgv3ivC

Related posts

மாங்காய் – இஞ்சி ஊறுகாய்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரெட் பஜ்ஜி

nathan

மனோஹரம்

nathan

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய சுறா புட்டு

nathan

சுவையான சத்தான வேர்க்கடலை தயிர் பச்சடி

nathan

மினி வெஜ் ஊத்தப்பம்

nathan

பட்டர் கோழி சாண்ட்விச்

nathan

கருப்பட்டி இட்லி

nathan

நெய் ரோஸ்ட் | Ghee Roast

nathan