ஆரோக்கிய உணவு

தேனை தண்ணீரில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

தினமும் காலையில் தண்ணீர் பருகுவதால் நிறைய உடல்நல நன்மைகள் கிடைக்கிறது என்று நம்மில் பலரும் அறிந்திருப்போம். ஆனால், அதை விட பலமடங்கு நல்ல பலன்களை தரவல்லது தேன். ஆம், தேனை தண்ணீரோடு கலந்து பருகுவதால் நமது உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.

தேனில் பொட்டாசியம், இரும்புச்சத்து, மினரல்ஸ் போன்ற நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இதை நீரோடு கலந்து பருகுவதால், உடல் எடை குறைப்பு, இதய பாதிப்புகள், உடல் புத்துணர்ச்சி, இரத்த சர்க்கரை போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண முடியும்….

பலன் 1 உடற்பயிற்சி பயிற்சியாளர்கள், விறுவிறுப்பாக நீங்கள் உடல் பயிற்சி செய்து முடித்த பிறகு தேனை தண்ணீரில் கலந்து குடிப்பதால் உடல் வேகமாக புத்துணர்ச்சி பெறுகிறது என்று கூறுகிறார்கள்.

பலன் 2 தேனை தண்ணீரில் கலந்து குடிப்பதால் தொண்டை கரகரப்பு சரியாகும். இருமல் மற்றும் சுவாச கோளாறுகளுக்கு கூட இது நல்ல பயன் தருகிறது.

பலன் 3 தேன் ஓர் சிறந்த ஆன்டி-பாக்டீரியால் ஆகும். இது சரும தொற்று ஏற்படமால் இருக்க உதவுகிறது. மற்றும் இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சருமத்திற்கு வலுவூட்டுகிறது.

பலன் 4 தேனை தண்ணீரில் கலந்து குடிப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியுமாம். நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த பலன் தரும் என கூறப்படுகிறது.

பலன் 5 உடல் எடையை குறைக்க விரும்புவோர், தேனை தண்ணீரில் கலந்து தினமும் பருகலாம். இது உடல் எடையை குறைக்க சிறந்த பயன் தருகிறது.

பலன் 6 தேனில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இதய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இது ஒரு சிறந்த பலனாக கருதப்படுகிறது.

பலன் 7 சில மருத்துவர்கள், நமது உடலில் இருக்கும் நச்சுக்களை போக்கவும் கூட இது சிறந்த பயன் தருகிறது என கூறுகிறார்கள். மற்றும் உடலுக்கு தேவையான சக்தியையும் இது தருகிறது. எனவே, நீங்கள் தினமும் கூட தேனை தண்ணீரில் கலந்து பருகலாம்.

பலன் 8 தேனில் இருக்கும் வைட்டமின், மினரல்ஸ் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவூட்டுகிறது .

பலன் 9 செரிமானத்தை சரி செய்யும் தன்மையுடையது தேன். குமட்டல் இருப்பவர்கள் கூட தினமும் தண்ணீரில் தேனை கலந்து பருகி வந்தால் நல்ல தீர்வு காண முடியும்.

பலன் 10 தேனை எலுமிச்சை நீரோடு கலந்து பயன்படுத்துவதால் வாய் துர்நாற்றத்தில் இருந்து நல்ல தீர்வு காண முடியும்.

18 1442549802 2whathappenswhenyoudrinkhoneywater

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button