மருத்துவ குறிப்பு

கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து: விஞ்ஞானிகள் தகவல்

கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் புதிய மருந்து கண்டு பிடித்துள்ளனர்.

கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து: விஞ்ஞானிகள் தகவல்
லண்டன்:

பெண்களை கர்ப்பபை புற்று நோய் அதிக அளவில் தாக்குகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

அந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் புதிய மருந்து கண்டு பிடித்துள்ளனர். அதற்கு ஓஎன்எக்ஸ்-0801 என பெயரிடப்பட்டுள்ளன.

இந்த மருந்தில் உள்ள ‘போலிக்’ அமிலம் புற்று நோய் பாதித்த செல்களக்குள் ஊடுருவுகிறது. இதன் மூலம் புற்று நோய் கட்டிகளின் அளவை படிப்படியாக சுருக்கி சிறியதாக்குகின்றன.

மேலும் இந்த மருந்தினால் நல்ல நிலையில் உள்ள செல்கள் அழியாது. புற்று நோய் பாதித்த செல்கள் மட்டுமே அழிகின்றன. இந்த மருந்தை இங்கிலாந்தில் உள்ள புற்று நோய் ஆராய்ச்சி மையத்தின் மருந்து தயாரிப்பு நிறுவன விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இந்த மருந்தை கர்ப்பபை புற்று நோய் பாதித்த 15 பெண்களுக்கு பயன்படுத்தினர். அவர்களில் 7 பேருக்கு புற்று நோய் கட்டி சுருங்கி சிறியதானது. இதன் மூலம் இம்மருந்து மூலம் கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.201706041125524182 New medicine for cure to pregnant cancer SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button