சரும பராமரிப்பு

அக்குள் கருமையை நீக்கும் அசத்தலான டிப்ஸ்

நமது உடம்பில் கருப்பாக இருக்கும் ஒரு இடம் தான் அக்குள். இப்போது அக்குள்களில் ஏற்படும் கருமையை போக்கி, பளிச்சிட சூப்பரான சில இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம்.

நமது உடலில் மடிப்புகள் அதிகம் உள்ள மறைவான இடங்கள் அனைத்தும் கருமையாக இருக்கும். ஏனெனில் மறைவான இடங்களில் அதிகமாக காற்றோட்டம் இல்லாமல் இருப்பதால், அந்த இடங்களில் அழுக்குகள் மற்றும் கிருமிகள் அதிகமாகி, கருமை நிறத்தினைக் கொடுக்கிறது.

நமது உடம்பில் அப்படி கருப்பாக இருக்கும் ஒரு இடம் தான் அக்குள். எனவே அக்குள்களில் ஏற்படும் கருமையை போக்கி, பளிச்சிட சூப்பரான சில டிப்ஸ் இதோ!
சர்க்கரையானது, நமது அக்குள்களில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, பளிச்சிட செய்யும் தன்மைக் கொண்டது. எனவே சர்க்கரையை நீரில் கலந்து, அதை அக்குள்களில் ஸ்கரப் செய்து வர வேண்டும்.
உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. எனவே இது நமது சருமத்தில் எந்த ஒரு பக்க விளைவையும் ஏற்படச் செய்யாது எனபதால், உருளைக்கிழங்கை வெட்டி, அதை அக்குளில் 10 நிமிடம் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

தினமும் குளிக்கும் முன், எலுமிச்சை சாற்றில் சிறிது நீர் கலந்து, அதனை பஞ்சில் நனைத்து, அக்குள்களில் தேய்த்து, 5 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். பின் குளித்து முடித்ததும் ஏதேனும் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.
தயிர், மஞ்சள் தூள், தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து அதை பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவி, உலர வைக்க வேண்டும். இந்த முறையினாலும் அக்குளிள் இருக்கும் கருமை விரைவில் நீங்கிவிடும்.
வெள்ளரிக்காய் நமது சருமத்தின் கருமையை போக்கி, குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே தினமும் வெள்ளரிக்காயை வெட்டி, அக்குளில் தடவி உலர வைக்க வேண்டும்.201702010932007721 Tips for removing darkening the armpit SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button