மருத்துவ குறிப்பு

இந்த உணவுகளை சாப்பிட்டா சிறுநீரகத்தில் கல் உருவாகும்…

இன்றைய காலத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் அழையா விருந்தாளியாக வந்துவிடுகின்றன. அதில் ஒன்று தான் சிறுநீரக கற்கள். இந்த சிறுநீரக கற்களானது உணவுகளில் உள்ள தாது உப்புக்கள் சிறுநீரகங்களில் படிவதால் உண்டாகிறது. அதுமட்டுமின்றி, உடல் வறட்சி, அதிகளவு ஆல்கஹால் அருந்துவது, பரம்பரை, உடல் பருமன், செரிமான பிரச்சனைகள் மற்றும் முறையற்ற டயட் போன்றவற்றாலும் சிறுநீரக கற்கள் உருவாகிறது.

சிறுநீரக கற்கள் இருந்தால் ஒருசில அறிகுறிகள் தென்படும். இந்த அறிகுறிகள் மனிதருக்கு மனிதர் வேறுபடும். இருப்பினும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் இரத்தம், குமட்டல், காய்ச்சல், குளிர் மற்றும் தீவிர களைப்பு போன்றவை பொதுவான அறிகுறிகள்.

சிறுநீரக கற்கள் வராமல் இருக்க வேண்டுமானால், ஒழுங்கான டயட்டை முதலில் பின்பற்ற வேண்டும். ஏனெனில் சில உணவுகள் சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும். இங்கு அப்படி சிறுநீரக கற்கள் உருவாதற்கு காரணமாக இருக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து கவனமாக இருங்கள்.

மாட்டிறைச்சி மாட்டிறைச்சியில் புரோட்டீன் மற்றும் யூரிக் அமிலம் அதிகம் உள்ளது. யூரிக் அமிலம் அதிகம் உள்ள உணவுப் பொருளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு வந்தால், சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

கார்போனேட்டட் பானங்கள் கார்போனேட்டட் பானங்களான சோடா மற்றும் எனர்ஜி பானங்களை அடிக்கடி குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் அதிக அளவில் உருவாகும். மேலும் சமீபத்திய ஆய்வு ஒன்றிலும், சோடாக்களில் சிறுநீரக கற்களை உருவாக்கும் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் அதிகம் உள்ளது தெரிய வந்துள்ளது. எனவே இப்பானங்கள் குடிப்பதை உடனே நிறுத்துங்கள்.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளான வெள்ளை சாதம், சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இதர உணவுப் பொருட்கள் இன்சுலின் அளவை அதிகரித்து, சிறுநீரக பாதையில் தொற்றுக்களை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, சிறுநீரக கற்கள் உருவாவதற்கும் தூண்டும்.

காப்ஃபைன் காப்ஃபைனை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், சிறுநீரில் கால்சியத்தின் அளவு அதிகரித்து, சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும். மேலும் காப்ஃபைன் உடல் வறட்சியை ஏற்படுத்தும் என்பதால் காப்ஃபைன் நிறைந்த பானங்களை அதிக அளவில் எடுக்காதீர்கள்.

செயற்கை இனிப்புக்கள் செயற்கை இனிப்புக்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படும். மேலும் ஆய்வு ஒன்றில், செயற்கை இனிப்புக்கள் கலக்கப்பட்ட பானங்களை அதிக அளவில் குடித்து வந்தோருக்கு சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆல்கஹால்
ஆல்கஹாலை அளவுக்கு அதிகமாக குடித்து வந்தால், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்படும். முக்கியமாக ஆல்கஹால் உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவைக் குறைத்து, சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

உப்பு உப்பில் சோடியம் அதிகம் உள்ளதால், இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, இதய நோய் மற்றும் சிறுநீரக நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். எனவே சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருக்க வேண்டுமானால், உணவில் உப்பை அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

05 1446717623 6 alcohol

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button