ஆரோக்கிய உணவு

காலம் காலமாக சாம்பாரும், ரசமும் தான் தமிழ் மக்களை காப்பாற்றி வருகிறதாம் – ஆய்வில் தகவல்!

தென்னிந்திய மக்களின் மதிய உணவில் நூற்றாண்டு காலமாக இடம்பெற்று வருகிறது சாம்பாரும், ரசமும். இந்த இரண்டிலும் நிறைய வகைகள் இருக்கின்றன. சாம்பரில் காய்கறிகள் சேர்த்து சமைப்பது ருசியையும், ஆரோக்கியத்தையும் சேர்க்கிறது. ரசத்தை பற்றிக் கூறவே வேண்டாம், உடல்நிலை சரியில்லாத நோய் தீர்க்கும் ஆபத்பாந்தவனாக வந்து அருள்புரிபவன் ரசம்.

சில சமயங்களில் தினமும் அதே சாம்பார், ரசமா என்று அலுத்துக் கொள்வோம். ஆனால், அலுப்பே இன்றி நமது ஆரோக்கியத்தை நூற்றாண்டுக் காலமாக காப்பாற்றி வந்துள்ளன இவர் இரண்டும். ஆம், சமீபத்தில் தேசிய ஊட்டச்சத்து ஆணையம் நடத்திய ஆய்வில், தென்னிந்திய மக்களை பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து சாம்பார், ரசம் தான் காப்பாற்றியுள்ளது என தெரியவந்துள்ளது…

புளிக் கரைத்த தண்ணீர்
பெரும்பாலும் புளிக் கரைத்த தண்ணீர் இன்றி ரசம் சமைக்கப் படாது. அதே போல சிலர் சாம்பாரிலும் கூட புளிக் கரைத்த தண்ணீரை பயன்படுத்துவது உண்டு. இந்த புளிக் கரைத்த தண்ணீர் தான் முக்கியமான விஷயம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

புளிக் கரைத்த தண்ணீரின் நலன்கள்
இது காயத்தை ஆற்றும் தன்மை உடையது, உடலில் தங்கியிருக்கும் தீங்கு விளைவிக்கும் அசுத்தங்களை நீக்க புளிக் கரைத்த நீர் உதவுகிறது.

தென்னிந்தியாவும் தண்ணீர் பற்றாக் குறையும் தென்னிந்தியா மாநிலங்களில் தண்ணீர் பற்றாக் குறை என்பது தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வருகிறது. மற்றும் குடிநீரில் ஃபுளோரைடு கலப்பு உள்ளது தென்னிந்திய மாநிலங்களில் அதிகம். அதிலும் ஆந்திராவில் உச்சக்கட்டம் என்று கூறப்படுகிறது.

ஹைதராபாத்தின் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஆந்திராவின் ராயலசீமா போன்ற பகுதிகளில் நீரில் கலப்பு உள்ள ஃபுளோரைடினால் நிறைய தாக்கம் ஏற்பட்டது. அப்போது தான் ஹைதராபாத்தின் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஓர் ஆய்வில் ஃபுளோரைடால் ஏற்படும் பாதிப்புகளுக்கு புளிக் கரைத்த நீர் நல்ல தீர்வு தரவல்லது என கண்டறியப்பட்டது.

ஃபுளோரைடுனால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கள் பருகும் நீர் அல்லது உட்கொள்ளும் உணவில் 1 மி.கி-க்கு மேலான ஃபுளோரைடு சேர்வதால் மெல்ல மெல்ல எலும்புகள் பாதிக்கப்படுகிறது, பற்கள் பாதிக்கப்படுகிறது, செரிமான மண்டலத்தின் திறன் குறைகிறது மற்றும் சில உடல் பாகங்களின் சமநிலை பாதிக்கப்படுகிறது.

சிறுநீர் வழியாக அசுத்தங்களை வெளியேற்றுகிறது தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் ஃபுளோரைடு மற்றும் பிற வழிகளில் உடலில் சேரும் அசுத்தங்களை புளிக் கரைத்த நீர் சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது என அறிந்தனர். இது உடலில் உள்ள நச்சுகளை எல்லாம் அழித்து உடலநலத்தை அதிகரிக்க உதவுகிறது.

உடல்நல குறைபாடு இதனால் தான் காய்ச்சல், சளி போன்ற உடல்நல குறைபாடு அதிகமாகும் போது, அசுத்தங்கள், நச்சுகள் உடலில் இருந்து விரைவில் வெளியேற ரசத்தை மட்டும் உணவை கொடுத்து வந்துள்ளனர்.

பண்டையக் காலம் முதலே தற்போது மார்டன் காலத்தில் நாம் செய்த தவறினால் ஏற்படும் பாதிப்புக்கு பண்டையக் காலத்து உணவுப் பொருள் நல்ல தீர்வளிக்கிறது. எனவே, உங்கள் டயட்டில் புளிக் கரைத்த நீரை பயன்படுத்தி சமைக்கப்படும் ரசம், சாம்பாரை இனிமேல் பெருமையாக சேர்த்துக் கொள்ளலாம். இது ப்ளோரோசிஸ் நோய்கள் ஏற்படாமல் இருக்க உதவும்.23 1442990190 2sambarandrasamsavingmillionsofpeopleinsouthindia

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button