எடை குறைய

ஏழே நாட்களில் 10 கிலோ எடையைக் குறைக்க இதய மருத்துவர் கூறும் ஓர் அற்புத வழி!

ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் அதிகமாக இருந்தால், அவர்கள் பல உடல்நல பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும். ஏனெனில் அத்தகையவர்களது உடலில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருக்கும்

உடலில் கொழுப்புக்கள் தேங்குவதால், அது இரத்த குழாய்களில் அடைப்புக்களை ஏற்படுத்தி இதய நோய்களுக்கு எளிதில் வழிவகுக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக, அதிகரிக்கும் நம் உடல் எடையைக் குறைக்க பல வழிகள் உள்ளன. குறிப்பாக பல டயட்டுகள் உள்ளன.

இக்கட்டுரையில் இதய மருத்துவர் ஒருவர் 7 நாட்களில் 10 கிலோ எடையைக் குறைக்க உதவும் டயட் திட்டம் குறித்து கூறியது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி வந்தால், நிச்சயம் உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

காலை உணவு
என்ன தான் எடையை குறைக்கும் டயட்டில் இருந்தாலும், காலை உணவு மிகவும் இன்றியமையாதது. இதய மருத்துவர் கூறிய டயட்டில் அனைத்து நாட்களும் காலையில் ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிட வேண்டும். குறிப்பாக திராட்சை, வாழைப்பழம் போன்ற பழங்களைத் தவிர்த்து, வேறு எந்த பழத்தையும் சாப்பிடலாம்.

நாள் #1
மதிய உணவு: 1 வேக வைத்த முட்டை, 1 ஆரஞ்சு, 200 மிலி தயிர்
இரவு உணவு: 2 தக்காளி, 2 வேக வைத்த முட்டைகள், 2 துண்டு பிரட் டோஸ்ட், 1/2 வெள்ளரிக்காய்

நாள் #2
மதிய உணவு: 1 வேக வைத்த முட்டை, 1 ஆரஞ்சு, 1 கப் தயிர்
இரவு உணவு: 1 ஆரஞ்சு, 1 துண்டு பிரட் டோஸ்ட், 125 கிராம் வேக வைத்த இறைச்சி, 1 கப் டீ அல்லது காபி சர்க்கரை இல்லாமல்

நாள் #3
மதிய உணவு: 1 வேக வைத்த முட்டை, 1 ஆரஞ்சு, 1 வெள்ளரிக்காய்
இரவு உணவு: 1 ஆரஞ்சு, 1 துண்டு பிரட் டோஸ்ட், 125 கிராம் வேக வைத்த இறைச்சி, 1 கப் டீ அல்லது காபி சர்க்கரை இல்லாமல்

நாள் #4
மதிய உணவு: 1 தக்காளி, 1 துண்டு பிரட் டோஸ்ட், 125 கிராம் காட்டேஜ் சீஸ்
இரவு உணவு: 1 ஆரஞ்சு, 1 துண்டு பிரட் டோஸ்ட், 125 கிராம் வேக வைத்த இறைச்சி, 1 கப் டீ அல்லது காபி சர்க்கரை இல்லாமல்

நாள் #5
மதிய உணவு: 1 தக்காளி, 1 துண்டு பிரட் டோஸ்ட், 200 கிராம் வேக வைத்த இறைச்சி அல்லது மீன்
இரவு உணவு: 1 கப் வேக வைத்த கேரட், உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி

குறிப்பு
காய்கறிகளை வேக வைத்து சாப்பிடும் போது, அதில் உப்பு சேர்க்கக்கூடாது. இந்த 5 நாள் டயட்டை பின்பற்றிய பின், 2 நாட்கள் இடைவெளி விட்டு, மீண்டும் 8 ஆவது நாளில் இருந்து மீண்டும் டயட்டை ஆரம்பியுங்கள்.

உடற்பயிற்சி
முக்கியமாக இந்த டயட்டை பின்பற்றும் போது, தினமும் தவறாமல் 30 நிமிடம் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை
இதய நோயாளிகள் இந்த டயட்டைப் பின்பற்றும் முன், தவறாமல் உங்கள் இதய மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் டயட் மேற்கொள்ளும் நாட்களில் ஆல்கஹாலை அறவே தொடக்கூடாது.

10562960 655520184577444 911431384107023476 n

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button