தலைமுடி சிகிச்சை

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது?

தலைமுடி பிரச்சனையை சரிசெய்ய கண்ட சிகிச்சைகளை மேற்கொள்வதை விட, தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுத்து வந்தால், தலைமுடி பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம். அதிலும் நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு பராமரித்தாலே போதும்.

குறிப்பாக வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். அதுவும் அந்த பொருட்களைக் கொண்டு எண்ணெய் தயாரித்து தினமும் பயன்படுத்தினால் மிகவும் நல்லது.

இங்கு தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையைக் கொண்டு எப்படி எண்ணெய் தயாரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

கறிவேப்பிலையில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் புரோட்டீன்கள், தலைமுடி உதிர்ந்து மெலிவதைத் தடுக்கும்.
* கறிவேப்பிலையில் உள்ள அமினோ அமிலங்கள், மயிர்கால்களை வலிமைப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
*, கறிவேப்பிலையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்ட் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுவித்து, முடியின் வளர்ச்சியையும் தூண்டும்.
வெந்தயத்தின் நன்மைகள்:

* வெந்தயத்தில் உள்ள வைட்டமின் பி, நரைமுடியைத் தடுக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரிசெய்யும்.
* வெந்தயம் தலைமுடி உதிர்வதைத் தடுக்க உதவும் மற்றும் வெந்தயத்தில் உள்ள லிசித்தின், தலைமுடிக்கு பொலிவைத் தரும்.

தேவையான பொருட்கள்:
வெந்தயம் – 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1/2 கப்
ஆலிவ் ஆயில் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 10-20

தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்றி, அத்துடன் வெந்தயத்தை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் கருப்பாக மாறியதும், அத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, கறிவேப்பிலையையும் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைத்து பயன்படுத்த வேண்டும்.

எண்ணெயின் நன்மைகள்:
* இந்த எண்ணெய் பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரிசெய்ய உதவும்.
* ஸ்கால்ப்பை வறட்சியின்றி பார்த்துக் கொள்ளும்.
* தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும்.
* தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
* முடி வெடிப்பைத் தடுக்கும்
* நரைமுடியைத் தடுக்கும்.
* பொடுகைப் போக்கும்.
* ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்களை சரிசெய்யும்.curry leafs with methi 03 1475478532 08 1486533845

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button