33.3 C
Chennai
Tuesday, May 21, 2024
1494411455 7212
அசைவ வகைகள்

சைனீஸ் எக் நூடுல்ஸ் செய்ய வேண்டுமா?

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் – 1 பாக்கெட்
முட்டை – 4
பூண்டு – 2 பெரிய பற்கள்
நட்சத்திர சோம்பு – 1
பச்சை மிளகாய் – 4
மிளகு தூள் – தேவையான அளவு
வினிகர் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
குடமிளகாய் – 1
வெங்காயம் – 2
கேரட் – 1
சோயா சாஸ் – 1 ஸ்பூன்

செய்முறை:

பச்சை மிளகாய், பூண்டு, குடமிளகாய், கேரட், வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் நீர் விட்டு அதில் நூடுல்ஸைப் போட்டு கொதிக்க வைக்கவும். முக்கால் பாகம் வெந்தவுடன் அதனை வடிகட்டிக் கொள்ளவும். பின்பு அதனுடன் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தனியே வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் தீயை அதிகரித்து விட்டு அதனுடன் பச்சை மிளகாய், பூண்டு நட்சத்திர சோம்பு போட்டு சிறிது நேரம் வதக்கவும். பின்பு குடமிளகாய் வெங்காயத்தை போட்டு வதக்கிய பின்னர் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கவும்.

காய்கறிகள் வதங்கியவுடன் காய்கறிகளை கடாயின் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு தீயைக் குறைத்து அதில் முட்டையை அடித்து ஊற்றவும். முட்டையை லேசாக கிளறி விடவும். முட்டை வெந்தவுடன் வினிகர், சோயா சாஸ், மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள நூடுல்ஸ், மிளகு தூள், உப்பு சேர்க்கவும்.

பின்பு தீயை அதிகரித்து லேசாக கிளறி 2 நிமிடம் வேக வைக்கவும். சுவையான சைனீஸ் ஸ்டைல் எக் நூடுல்ஸ் தயார்.1494411455 7212

Related posts

கொத்தமல்லி சிக்கன் குருமா

nathan

முந்திரி சிக்கன் கிரேவி

nathan

நண்டு பிரியாணி.! செய்வது எப்படி.!

nathan

இறால் பிரியாணி

nathan

சிக்கன் மிளகு கறி

nathan

மசாலா முட்டை ரோஸ்ட்

nathan

சால மீன் குழம்பு செய்வது எப்படி?

nathan

காரம் தூக்கல்… மட்டன் க்ரீன் கறி… ருசி அதைவிட தூக்கல்!

nathan

பாசிப்பருப்பு பொரித்த முட்டை குழம்பு!!

nathan