சரும பராமரிப்பு

இளம்பெண்களே! உங்க அழகுக்கு அழகு சேர்க்க, தினமும் நீங்கள் பின்பற்ற‍வேண்டிய வழிமுறைகள்

இளம்பெண்களே! உங்க அழகுக்கு அழகு சேர்க்க, தினமும் நீங்கள் பின்பற்ற‍வேண்டிய வழிமுறைகள்
இளம் வயதில் முகத்தில் சுருக்கம் வருவதை தடுக்கும் வழிகள்

பொதுவாக இளம் வயதில் அனைவருக்கும் பொதுவாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய மிகப்பெரிய கவலை எது என்றால், அது தங்களின் அழகை எப்ப‍டி பராமரிப்ப‍து என்பதுதான் இளம் வயதிலேயே சில
பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதைக் காணலா ம். இதற்குக் காரணம் “பாஸ்ட் புட்’ உணவு வகைகளை இவர்கள் அதிகம் உண்பது தான் எனக் கூறப்படுகின்றது. இது கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். உணவு விடயத்தில் சிறிது கவனம் செலுத்தினால் இவர்க ளது கவலை மறைந்தே போவது உறுதி. இதோ சில குறிப் புகள் உங்களுக்கு:
* காய்கறி பழ வகைகளைத் தவறாமல் சாப்பிடுங்கள். இயற்கையான காய்கறி, பழ வகைகளில் உள்ள விட்டமின் மற்றும் சத்துக்கள் தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடியவை.
*வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கரட் ஜூஸ் குடித்துவந்தால் சருமம் பளபளப்படையு ம்.
* துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத் தண்டு, நெல்லிக்காய் போ ன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள் வது நல்லது.

* வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேக வைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டி யும் பார்க்காது.
* நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள். இதனை தினமும்செய்யலாம் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.
* கறிவேப்பிலையிலுள்ள விட்டமின் ஏ இளமை யான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள பெரி தும் உதவும். அடிக்கடி துவையல் செய்து சாப்பிட லாமே.
* தினமும் 2 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வே ண்டும். அப்போது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கழிவுகளை நீக்க முடியும்.
– இந்த வழிமுறைகளை தினமும் பின்பற்ற வந்தால் விரைவில் இளம் வயதில் முகத்தில் வரும் சுருக்கத் தை தடுக்கவும்.Kangaroo Actress Priyanka Stills 26

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button