ஆரோக்கிய உணவு

ஆண்களின் உடல் சக்தியை அதிகரிக்க உதவும் ஆறு வகையான தேநீர்!!!

ஆறாம் விரலாய் சிகரெட் இல்லமால் கூட ஓர் ஆணை பார்த்துவிட முடியும். தேநீர் பருகாத ஆண்களை காண்பதுஅரிது. இதில், டீயும், சிகரெட்டும் இணைபிரியா பிறவிகளாக பழக்கம் வைத்திருக்கும் ஆண்கள் தான் அதிகம். ஒரு சிப் டீ, ஒரு ஃபவ் சிகரெட் என்பது பலரது பழக்கமாக இருக்கிறது.

டீ என்பது ஆண்களின் வாழ்கையில் இருந்து பிரிக்க முடியாத காரியமாக இருக்கிறது எனில், அதை ஏன் நீங்கள் ஆரோக்கியமான வழியில் பின்பற்ற கூடாது? என்பது தான் நமது கேள்வி. ஆம், ஆண்களின் உடல் சக்தியை அதிகரிக்கும் சில டீ வகைகள் இருக்கும் போது நீங்கள் அதை பின்பற்றி பயனடையலாமே…

செம்பருத்தி டீ
செம்பருத்தி வெறும் பூ மட்டுமல்ல, இது ஒருவகையான மூலிகையும் கூட. இது ஆண்களின் உடல்நலனை அதிகரிக்க உதவுகிறது. இதில் வைட்டமின் சி சத்து நிறைய இருக்கிறது. மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

டார்ஜிலிங் டீ
டார்ஜிலிங் டீ நிறைய ஃப்ளேவர்களில் கிடைக்கிறது. நிறைய வகைகள் இருந்தாலும் கூட இது தரும் பயன் ஒன்று தான். டார்ஜிலிங் டீ மன அழுத்தத்தை குறைக்கவும், டைப் 2 நீரழிவு நோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

இஞ்சி டீ
இரத்த ஓட்டம் அதிகரிப்பு, சீரிய குடலியக்கம் மற்றும் வயிறு சார்ந்த உபாதைகள் போன்றவற்றுக்கு நல்ல தேர்வு தருகிறது இஞ்சி டீ. இதில் வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் இதர மினரல்ஸ் சத்துகள் இருக்கின்றன.

எலுமிச்சை டீ
உடல் எடையை குறைக்க வெகுவாக உதவுகிறது எலுமிச்சை டீ. மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் இது உதவுகிறது.

ப்ளாக் டீ
இதயம், எலும்புகளின் வலிமை, மன அழுத்தம் குறைக்க, நோய் எதிர்ப்பை அதிகரிக்க, நீரிழிவு நோய் ஏற்படாமல் இருக்க என பல நன்மைகளை விளைவிக்கிறது ப்ளாக் டீ.

கிரீன் டீ
இந்த உலகிலேயே சிறந்த டீ எது என்றால், அது கிரீன் டீ தான். இதில் எந்த பக்கவிளைவுகளும் இல்லை. மற்றும் உடல் சக்தியை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் சிறந்த டீயாக திகழ்கிறது கிரீன் டீ.14 1442227121

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button