ஜாம் வகைகள்

வீட்டிலேயே செய்திடலாம் ஆப்பிள் ஜாம்!

ஜாம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் அந்த ஜாம்மை பிரட்டுடன் சேர்த்து, காலை வேளையில் சாப்பிட்டு சென்றால், காலை உணவே தேவைப்படாது.

இத்தகைய ஜாம்மை இதுவரை கடைகளில் வாங்கி தான் சாப்பிடுவோம். ஆனால் இப்போது அந்த ஜாம்மை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அதிலும் பிடித்த பழங்களை வைத்து செய்யலாம். இப்போது அவற்றில் ஆப்பிளை வைத்து எப்படி ஜாம் செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் – 1 1/2 கப் (தோலுரித்து நறுக்கியது)
சர்க்கரை – 1/4 கப்
எலுமிச்சை சாறு – 1 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – சிறிது

செய்முறை:

முதலில் ஆப்பிளை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல், ஒன்றிரண்டாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு செய்து கொள்ள வேண்டும்.

சர்க்கரைப் பாகு ரெடியானதும், அதில் அரைத்து வைத்துள்ள ஆப்பிளை சேர்த்து, கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும். கலவையானது கெட்டியானதும், அதில் எலுமிச்சை சாறு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும். பிறகு அதனை குளிர வைத்து, காற்றுப் புகாத பாட்டிலில் வைத்து கொள்ளலாம். இப்போது சுவையான ஆப்பிள் ஜாம் தயார்.1494319527 5562

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button