சரும பராமரிப்பு

பெண்களின் அழகை கெடுக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்கும் எண்ணெய்கள்

ஸ்ட்ரெட்ச் மார்க்குளை போக்குவதற்கு க்ரீம், ஜெல் எந்த ஒரு பலனையும் தருவதில்லை. அதுவே இயற்கை பொருட்களைக் கொண்டு முயற்சித்தால், நிச்சயம் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்கலாம்.

பெண்களின் அழகை கெடுக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்கும் எண்ணெய்கள்
அழகைக் கெடுக்கும் விஷயம் என்று வரும் போது, அதில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளும் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் உடலின் வயிறு, தொடை, பேக் போன்ற இடங்களில் தான் பெரும்பாலும் வரும். சில சமயங்களில் சிலருக்கு மார்பகங்களில் கூட வரும். இந்த ஸ்ட்ரெட்ச் மார்க் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.

அதில் கருத்தரித்தல், உடல் எடை அதிகரித்தல், ஜிம் சென்று பயிற்சி செய்தல் போன்ற காரணங்களால், சருமமானது திடீரென்று விரிந்து சுருங்கும் போது, தழும்புகளாக மாறுகின்றன. ஆகவே இத்தகைய ஸ்ட்ரெட்ச் மார்க்குளை போக்குவதற்கு பல க்ரீம் மற்றும் ஜெல் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் இவை எந்த ஒரு பலனையும் தருவதில்லை.

அதுவே இயற்கை பொருட்களைக் கொண்டு முயற்சித்தால், நிச்சயம் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்கலாம். அதிலும் இயற்கை எண்ணெய்கள் கொண்டு தினமும் மசாஜ் செய்து வருவதன் மூலம், விரைவில் சருமத்தில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைய வைக்கலாம். அதுமட்டுமின்றி, சருமத்தில் வறட்சி ஏற்படுவதையும் தடுக்க முடியும்.

இப்போது உடலில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்கப் பயன்படும் சில எண்ணெய்களைக் கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை முயற்சி செய்து பார்த்து, அதன் நன்மையைப் பெறுங்கள்.

201706231025118964 stretch marks. L styvpf
ரோஸ்மேரி ஆயிலை பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, தினமும் ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி, 15-20 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், தழும்பானது மறைய ஆரம்பிக்கும். தற்போது அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ஆலிவ் ஆயிலைக் கொண்டு, மசாஜ் செய்து வந்தாலும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்கலாம்.

மேலும் இதனால் சருமம் நன்கு ஈரப்பசையுடன் வறட்சியடையாமல் இருக்கும். பாதாம் எண்ணெயில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் ஒன்று தான் ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்குவது. அதற்கு பாதாம் எண்ணெயை, ஆலிவ் ஆயில் மற்றும் கோதுமை எண்ணெயுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் மசாஜ் செய்து கொண்டு படுக்க வேண்டும்.

இதனால் நாளடைவில் தழும்புகள் மறைந்துவிடும். கோதுமை எண்ணெயுடன், சிறிது ரோஸ் எண்ணெய் சேர்த்து கலந்து, மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் இந்த எண்ணெய் கலவையைக் கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும். மற்றொரு சிறப்பான ஸ்ட்ரெட்ச் மார்க்கை போக்கும் எண்ணெய் என்று பார்த்தால், அது லாவெண்டர் எண்ணெயுடன், ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்வது தான்.

3 டீஸ்பூன் ஜிஜோபா ஆயில், 10 துளிகள் பச்சௌலி ஆயில் (patchouli oil) மற்றும் 5 துளிகள் லாவெண்டர் எண்ணெய் போன்றவற்றை கலந்து, ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். ஆப்ரிக்காட் எண்ணெய் சரும சுருக்கத்தைப் போக்குவதோடு, ஸ்ட்ரெட்ச் மார்க்குகளையும் போக்கும். சமையலில் பயன்படுத்தும் நல்லெண்ணெய் கொண்டு, சருமத்தை மசாஜ் செய்து வந்தாலும், ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறையச் செய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button