ஆரோக்கியம் குறிப்புகள்

இரவு 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்

நாகரீகம் வளர்ந்துள்ள இக்காலத்தில் வேலைப்பளு, மன உளைச்சல், தூக்கமின்மை, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால் இரவு 11 மணிக்கு மேல் தூங்கினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உளவியல் மருத்துவரான சிவராமன் என்பவர் அறிவியல் ரீதியாக விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மருத்துவர் சிவராமன் இரவு 11 மணிக்கு மேல் தூங்குவதால் ஏற்படும் மோசமான விளைவுகளை பட்டியலிட்டுள்ளார்.

”மனித தோன்றிய காலம் முதல் தற்போது வரை மனிதர்கள் இயற்கையை சார்ந்து தான் உயிர் வாழ முடியும். மூச்சுக்காற்று, தண்ணீர், வெப்பம், உணவு உள்ளிட்ட அனைத்தும் இயற்கையில் இருந்து தான் நமக்கு கிடைக்கிறது.

ஆனால், நாகரீகமும் தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்ததும் மனிதர்களாகிய நாம் இயற்கையை எதிர்த்து வாழ முயற்சி செய்து வருகிறோம்.

மின்சாரம் கண்டுபிடிக்காத காலத்தில் நாம் அனைவரும் இரவு 7, 8 மணிக்கெல்லாம் தூங்க சென்றுவிடுவோம். ஆனால், மின்சாரம் வந்ததும் அதனை பயன்படுத்தி இரவுப் பணிகளிலும் ஈடுப்பட்டு வருகிறோம்.

ஒரு மனிதர் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என தவறாக எண்ணி வருகின்றனர்.

நமது உடலமைப்பின்படி, இரவு 11 மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும்.

ஏனெனில், சூரியன் உதிக்கும்போது அந்த வெப்பத்தில் நமது உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். சூரியன் அஸ்த்தமனம் ஆன பின்னர் இரவு நேரத்தில் சில ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கும்.

இது மனிதன் வளர்ச்சி அடைந்த சுமார் 4 மில்லியன் ஆண்டுகளாக நமது உடலில் நடைபெற்று வரும் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.

முக்கியமாக, மேலோட்டலின் என்கிற ஹார்மோன் இரவில் தூங்கும்போது மட்டும், அதுவும் அறையில் வெளிச்சம் இல்லாமல் தூங்கும்போது மட்டுமே சுரக்கும்.

இந்த மேலோட்டலின் ஹார்மோனை செயற்கையாக எந்த மாத்திரை சாப்பிட்டும் சுரக்க வைக்க முடியாது.

தற்போதைய காலத்தில் இரவு நேரத்தில் பணிபுரிபவர்கள், இரவில் நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களை பார்ப்பவர்கள் மற்றும் தூங்காமல் தொலைக்காட்சி அல்லது புத்தகம் படிப்பவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரக்காது.

இதன் விளைவாக, புற்றுநோய் வருவதற்கு மிக முக்கிய காரணம் இந்த மேலோட்டலின் ஹார்மோன் சுரக்காமல் இருப்பது தான்.

இளம்வயதினருக்கு இப்பிரச்சனை உடனடியாக தெரிந்து விடாது. ஆனால், உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு 27 முதல் 30 வயதிற்குள் தான் உடல் உபாதைகள் தொடங்கும்.

முதலில் செரிமானக் கோளாறு, வாயு தொல்லை என தொடங்கி 35 வயதிற்கு பிறகு இது முற்றிய நிலையில் 40 வயதிற்கு மேல் புற்றுநோயாகவும் மாற வாய்ப்புள்ளது.

எனவே, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை ஆரம்பத்திலேயே தவிர்க்க இரவு 11 மணிக்கு முன்னதாகவே படுக்கைக்கு சென்று தூங்கிவிடுவது மிகவும் சிறந்தது’ என உளவியல் மருத்துவரான சிவராமன் தெரிவித்துள்ளார்.12 1439360756 9 sleep

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button