மேக்கப்

வெளிர்நிற சாயலில் மலர்தோரணமாய் உலா வரும் லெஹன்கா

வெளிர்நிற சாயலில் மலர்தோரணமாய் உலா வரும் லெஹன்கா

இந்திய ஆடைகளில் பெண்கள் அணிகின்ற ஆடைகளில் பலவித ரகங்கள் உள்ளன. அழகு மிளரும் ஆடை வடிவமைப்பின் தனித்துவமும் பெருமையும் உலக புகழ் பெற்றது. அந்த வகையில் இந்திய பேஷன் உலகின் உன்னதமான வரவு லெஹன்கா சோலி. லெஹன்கா சோலி அணிகின்ற போது கவுரவமும், அழகும், ஆடம்பரமும் கூடவே அணிவகுக்கும்.

அந்த அளவிற்கு சிறப்புமிகு வடிவமைப்பும், பொலிவுமிகு அம்சங்களும் அந்த ஆடை வகையில் இணைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான வடிவமைப்பும், வண்ண கலவையும் சேர்ந்த லெஹன்கா சோலிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. குட்டை மற்றும் நீண்ட அமைப்பு கொண்ட பிளவுஸ் பகுதியுடன் உயரமான பாவாடை அமைப்பு கொண்டது லெஹன்கா.

இதற்கு இணையாக அகலமான வேலைப்பாடு நிறைந்த சோலி எனப்படும் தாவணி பகுதி தனியாக தரப்படுகிறது. சோலி அணிந்தும், சோலி அணியாதவாறும் லெஹன்கா உடுத்தி கொள்ளலாம். பொதுவாக எந்தவிதமான விழாவிற்கு அணிய லெஹன்கா பொருத்தமான ஆடை, அத்துடன் லெஹன்கா அணிந்து செல்லும் போது அந்த விழாவின் சிறப்பு தன்மையும் கூடி விடுகிறது என்றால் அது மிகையாகாது.

வெளிர் நிற பூவேலைப்பாடு லெஹன்காகள்:

முன்பு அதிக ஆடம்பர வேலைப்பாடுகள் நிறைந்த லெஹன்காகள் மட்டும் அதிகம் உருவாக்கப்பட்டன. தற்போது கேஷ்வல் பார்ட்டிகளுக்கு அணிந்து செல்ல ஏற்றவாறு வெளிர் நிற பூ பிரிண்ட் மற்றும் வேறு டிசைன் செய்யப்பட்ட லெஹன்கா வருகின்றன. இவை பிரமாண்ட தோற்றத்தை தரவில்லை என்றாலும் லெஹன்கா என்ற உயர் மதிப்பு ஆடைக்கு உரிய தகுதியுடன் கூடுதல் வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகின்றன.

இந்திய உடை நாகரீகத்தில் ஓர் வெஸ்டர் ஆடை என்று கூறுவது போன்று இங்கீலிஷ் வண்ண கலவை, பூவேலைப்பாடு என்று மார்டன் டிரஸ் போன்று லெஹன்கா உருவாக்கம் மாற்றம் பெற்றுள்ளது. இதில் பிளவுஸ் அமைப்பு நீண்ட கைபகுதி கொண்ட சட்டை அமைப்பு போன்று டிசைன் செய்யப்படுகிறது. அத்துடன் பாவாடை அமைப்பு பிளவுஸ் கீழ்ப்பகுதியுடன் இணையும் வகையில் உடுத்தி கொள்வதும் புதிய வகை லெஹன்காவில் உள்ளது.

201707151441459587 lehenga. L styvpf

பிரமாண்டமாக தோற்றமளிக்கும் எம்பிராய்டரி லெஹன்கள்:

அடர்த்தியான ஆரஞ்ச், மெரூன், நீலம், பச்சை போன்ற வண்ணங்களில் திருமண பெண்ணுக்குரிய ஆடைகளாக பெரிய பிரமாண்ட எம்பிராய்டரி லெஹன்கா உருவாக்கப்படுகிறது. இவைகள் சற்று எடை அதிகமான ஆடைகள். முக்கியமான விழாவில் ராஜ அலங்கார தோற்றத்துடன் காண வகை செய்வது, முழு பாவாடை அமைப்பும் தங்க தோரனை வாயில் போன்ற ஜரிகை எம்பிராய்டரி செய்யப்பட்டு, அதே ஜரிகை வேலைப்பாட்டுடன் ஷார்ட் பிளவுஸ் மற்றும் நெட் துணியில் அகல ஜரிகை மோடிப்கள் வைத்தவாறு உள்ளன. இந்த ஆடைக்கு ஏற்ற கச்சிதமான நகை அணிந்தால் எந்த பெண்மணியும் ஓர் இளவரசியை போல், இராஜகுமாரியை போல் தோற்றமளிப்பர்.

மலர்கள் தவழும் லெஹன்கா சூட்:

இந்த வகை லெஹன்கா முழு கை சட்டை பிளவுஸ் கொண்ட நீள் சட்டை சூட் போன்று இருக்கும். அதற்கு இணையான பாவாடை அமைப்பு. இதில் பாவாடை அமைப்பு மிக குறைவான வேலைப்பாடு கொண்டதாக கீழ் ஜரிகை பார்டர் மட்டும் உள்ளவாறு இருக்கும். இந்த கோட் பகுதி ஒரு பக்கம் வளைந்த கொடி அமைப்பில் பூக்கள் ஜரிகை லேஸ் வேலைப்பாட்டில் பூத்திருப்பது போன்று சுழன்று வந்து வலபக்க தோள் பக்கம் வந்து மார்பு பகுதியில் முடியும். கோட் அமைப்பிலான காலர் அமைப்பு கச்சிதம். இதற்கேற்ற பிளைன் டிசைன் சோலி இணைப்பாக தரப்படும். விழாக்கள், ஆடம்பர விழாக்கள் என அனைத்திற்கும் அணிய ஏற்ற அற்புத வேலைப்பாடு கொண்ட லெஹன்கா.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button