எடை குறைய

உடல் எடை குறைக்க பின்பற்ற வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை – டாப் 10 டிப்ஸ்!

உடலுழைப்பு இல்லாத இன்றைய நவீன வாழ்க்கை முறையால் உடல் பருமன் என்பது மிகச்சாதரணமாக கடந்து போகிற விஷயமாக மாறிவிட்டது.

தொப்பையை குறைக்க டயட் என்று சொல்லி இன்னும் இன்னும் அதிகமாக உட்கொள்கிறார்களே தவிர தொப்பை மட்டும் குறைந்த பாடில்லை.

டயட்டை தாண்டி கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பற்றி இங்கே காண்போம்.

குறைந்த உணவுகள் :
இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையென குறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். மூன்று வேளை மொத்தமாக உண்பதை தவிர்த்திடுங்கள். இப்படி மொத்தமாக சாப்பிடுவதால் தான் தொப்பை வருகிறது.

நார்ச்சத்து உணவுகளை தவிர்த்திடுங்கள் :
தொப்பையிருந்தால் அதில் கேஸ் சேர்ந்திருக்கும். வாயுத்தொல்லை, வயிறு உப்பலாய் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதை தவிர்க்க அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை தவிர்த்திடுங்கள். ப்ரோக்கோலி, காலி ப்ளவர், பீன்ஸ் போன்றவைகளை சாப்பிட வேண்டாம்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் :
நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.அதுவும் ஒரே நேரத்தில் உண்ணாமல் குறைந்த அளவுகளில் சிறிது நேரத்திற்கு ஒரு முறை என்று உண்ணுங்கள்.

தவிர்க்க :
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்த்திடுங்கள். பாலில் இருக்கும் லாக்டோஸ் ஜீரணமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் இதை தவிர்ப்பது நன்று. இது ஜீரணமாகாமல் தொடர்ந்து சேர்ந்து வயிற்றில் கேஸ் நிரம்பி வாயுத்தொல்லையை ஏற்படுத்தும்.

மன அழுத்தம் :
இன்றைய தேதிக்கு மிக முக்கிய பிரச்சனை இது. மனச்சோர்வு ஏற்படுவது கூட எடை கூட காரணமாக அமைந்திடும். சோர்வாக இருக்கும் போது, உடம்பிலிருந்து கார்டிசோல் வெளியாகும். இதனால் இன்சுலின் லெவல் அதிகரிக்கும். அதோடு எக்கச்சகமாக பசியும் அதிகரிக்கும் என்பதால் அதிகப்படியாக உணவுகளை எடுத்துக் கொள்வோம். உடல் உழைப்பு இல்லாத வேலை என்றால் அது கொழுப்பாகவே நம் உடலில் சேரும்.

உப்பு:
சோடியம் நம் உடலில் உள்ள தண்ணீரை உறிஞ்சக்கூடியது.நாளொன்றுக்கு நம் உடலுக்கு தேவையான சோடியம் அளவை விட அதிகமான சோடியம் தினமும் நாம் எடுத்துக் கொள்கிறோம் இது அதிகப்படியான தாகத்தை ஏற்படுத்தி தொடர்ந்து தண்ணீரை குடிக்கச் செய்திடும். அளவுக்கு மீறி தண்ணீர் குடிக்கையில் அது தொப்பையில் சேர்ந்து தொப்பையையே அதிகப்படுத்தும். டேபிளில் உப்பு வைப்பதை தவிருங்கள். உணவில் உப்பு குறைந்திருந்தால் அதை அப்படியே சாப்பிட பழகுங்கள். பாக்கெட் உணவுகள் வாங்குகையில் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களில் உப்பின் அளவு பார்த்து வாங்குங்கள்.

சோடா :
வாயிலிருந்து காற்று அதாவது கேஸ் உள்ளே சென்று விட்டாலே அவை வயிற்றில் சென்று அடைத்துவிடும். வேகமாக சாப்பிடுவது, இனிப்பு மிட்டாய்களை மென்று கொண்டேயிருப்பது போன்றவை வயிற்றுக்குள்ளே காற்றை புகச் செய்திடும். இதனை தவிர்க்க சாப்பிடும் போது வாயை மூடி மெதுவாக உண்ணலாம். காற்று அடைக்கப்பட்ட பாக்கெட் டிரிங்க்ஸ் தவிர்த்திடுங்கள்.

ஃப்ரூட் ஜூஸ் :
பழச்சாறுகளில் அதிகப்படியான நியூட்டிரிசியன்கள் இருக்கிறது தான் ஆனால் அதில் நிறைய சர்க்கரை இருப்பதால் நம் உடலில் குளோக்கோஸ் லெவல் அதிகரித்திடும். அதனால் அதனை தவிர்த்துவிடுங்கள்.

ப்ரோட்டீன் :
எடையை குறைக்க தேவைப்படும் உணவுகளில் முக்கிய இடம் பிடிப்பது ப்ரோட்டீன் உணவுகள். இது எடையை குறைக்க மட்டுமல்ல மீண்டும் எடை கூடாமல் இருக்கவும் பயன்படும். ப்ரோட்டீன் அதிகமிருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

உடற்பயிற்சி :
உடலுக்கு தேவையான உழைப்பை கொடுக்க வேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதும் தொப்பை வரக் காரணமாகும். சீரான உணவுப்பழக்கம், முறையான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். இப்படிச் செய்தால் ஒரே வாரத்தில் நல்ல பலனை பார்க்கலாம்.

obesity 17 1500292504

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button