முகப்பரு

முகப்பருவை கையால் கிள்ளுவதால் சந்திக்கும் அபாயங்கள் குறித்து தெரியுமா?

முகத்தில் பிம்பிள் வந்தால், பலரும் கண்ணாடி முன்பு அதைப் பார்த்தவாறு பல மணிநேரத்தை செலவழிப்போம். அப்போது பலரது மனதிலும் பிம்பிளை கிள்ளிவிடலாமா என்று தோன்றும். அதே சமயம், கிள்ளி விட்டால் பரவி விடும் என்று பலர் கூறியதும் நினைவிற்கு வரும்.

நீங்களும் இம்மாதிரியான சூழ்நிலையில் உள்ளீர்களா? அப்படியெனில் உங்கள் முகத்தில் உள்ள அசிங்கமான பிம்பிளை கையால் கிள்ளும் முன் ஒருசில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு அந்த விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

விஷயம் #1 பிம்பிளில் உள்ள சீழ் உடன் பாக்டீரியாக்களும் சேர்ந்து இருப்பதால், அதை கையால் கிள்ளும் போது, இதுவரை மேற்பரப்பில் பாதிக்கப்பட்டிருந்த சருமத் துளைகள் ஆழமாக பாதிக்கப்படும். இதனால் கிள்ளிய அந்த பிம்பிள் மிகவும் தீவிரமாகக் கூடும்.

விஷயம் #2 பிம்பிளைக் கிள்ளும் போது, அதிலிருந்து பாக்டீரியாக்கள் கலந்த சீழ் வடிகட்டப்பட்டு வெளி வருவதால், அந்த பிம்பிளைச் சுற்றிய பகுதி பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் காரணமாக ஆரோக்கியமான சருமத் துளைகளும் பாதிப்பிற்குள்ளாகும் வாயப்புள்ளது.

விஷயம் #3 அசுத்தமான கையால் பிம்பிளைத் தொடும் போது, பிம்பிளில் உள்ள பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் முகம் முழுவதும் பிம்பிள் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

விஷயம் #4 பிம்பிளைக் கிள்ளும் போது, அதைச் சுற்றிய பகுதி கடுமையாக பாதிக்கப்படுவதால், அந்த பிம்பிள் மறையும் போது நீங்கா தழும்புகளை விட்டு செல்லும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

குறிப்பு இதுவரை பிம்பிளைக் கையால் கிள்ளுவதால் சந்திக்கக்கூடும் பிரச்சனைகள் குறித்து கண்டோம். இனிமேலாவது முகத்தில் பிம்பிள் வந்தால், கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க பழகுங்கள். பிம்பிளை தொடாமல் இருந்தாலே, 3-5 நாட்களில் அது தானாக போய்விடும்.

23 1487829780 5 acne

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button