ஆரோக்கியம்கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப கால நீரிழிவு

ld2284கர்ப்பம் தரிக்கிற வரை எந்தப் பிரச்னையும் இருந்திருக்காது. கர்ப்பம் உறுதியான பிறகு செய்யப்படுகிற சோதனைகளில், நீரிழிவு இ ருப்பதாகக் காட்டும்.  இன்றைய தலைமுறைப் பெண்களில் பலரும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். ‘‘பெரும்பாலும் பிரச வத்துக்குப் பிறகு நீரிழிவு காணாமல்  போய் விடும் என்றாலும் இது அலட்சியப்படுத்தக் கூடியதல்ல… அந்தப் பெண்களுக்கான எச்ச ரிக்கை மணி’’ என்கிறார் மகப்பேறு மற்றும்  குழந்தையின்மைக்கான சிறப்பு சிகிச்சை நிபுணர் மகாலட்சுமி.

‘‘கர்ப்ப கால நீரிழிவு இன்று மிகப் பரவலாகக் காணப்படுகிற பிரச்னையாகி விட்டது. முதல் காரணம் உடல் பருமன். கல்யாணத் துக்கு முன்பே உடல்  பருமனுடன் காணப்படுகிற பெண்களை அதிகம் பார்க்கிறோம். கல்யாணத்துக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பதற்கு  முன்பாவது அதை சரி செய்து கொள்ள  வேண்டும் என்கிற முனைப்பு அவர்களுக்கு இருப்பதில்லை. உடல் பருமன் என்பது ஏராள மான நோய்களுக்கான நுழைவு வாசல் என்பது  அவர்களுக்குத் தெரிவதில்லை. கர்ப்ப காலத்தில் 8  முதல் 12 கிலோ வரை ஒரு  பெண்ணுக்கு எடை கூடுவது இயல்பு.

ஆனால், ஏற்கனவே அதிக உடல் பருமனுடன் காணப்படுகிற பெண்களுக்கு இந்த எடை இன்னும் அதிகரிக்கும். அதன் விளைவாக  அவர்கள் உடலில்  சுரக்கும் இன்சுலின் வேலை செய்யாமல் போகும். கர்ப்ப கால நீரிழிவு அவர்களைப் பற்றிக் கொள்ளும்.   மருத்து வரோ இன்சுலின் ஊசிதான் போட  வேண்டும் என்பார். ‘போன மாசம் வரைக்கும் நல்லாத்தானே இருந்தேன்… இப்ப  எப்படி திடீ ர்னு டயப்பட்டீஸ் வரும்? அதுவும் இன்சுலின் போடற  அளவுக்கு எனக்கென்ன பிரச்னை?’ என்றெல்லாம் குழம்பிப் போவார்கள்.  கண்டதையும் தின்னத் தோன்றும் மசக்கை காலத்தில், இந்த திடீர் நீரிழிவு  காரணமாக, ஒரு பக்கம் உணவுக்கட்டுப்பாட்டையும் பின் பற்ற வேண்டியிருக்கும்.

கர்ப்ப காலத்தில் உண்டாகிற நீரிழிவுக்கு இன்சுலின் போடச் சொல்வதன் பின்னணியில் ஒரு காரணம் உண்டு. மாத்திரைகளாக எடுத் துக் கொள்கிற  போது, அது கருவிலுள்ள குழந்தையைப் பாதிக்கலாம். அதனால் இன்சுலினே பாதுகாப்பு. கர்ப்ப கால நீரிழிவு தற்கா லிகமானதுதான். அதாவது, 70  சதவிகிதப் பெண்களுக்கு இது பிரசவத்துக்குப் பிறகு சரியாகி விடும். 20 சதவிகிதப் பெண்களுக்கு  அது அடுத்து எப்போது வேண்டுமானாலும் வரலாம்  என்கிற நிலையில் காத்திருக்கும். மீதி 10 சதவிகிதப் பெண்களுக்கு கர்ப்பத்தில்  வந்து ஒட்டிக் கொண்ட நீரிழிவானது, பிரசவத்துக்குப் பிறகும் போக  மறுத்துக் கொண்டு அப்படியே தங்கி விடுவதும் உண்டு.

கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவானது உணவுக்கு முன் 95 மி.கி. மற்றும் சாப்பிட்டு 2 மணி நேரத்துக்குப் பிறகு 120  மி.கி.  அளவுதான் இருக்க வேண்டும். இந்த அளவை மிகச் சரியாகத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கட்டுப்பாடற்ற  நீரிழிவு கருவிலுள்ள  குழந்தையை பாதிக்கும். குழந்தை வழக்கத்தை விட அதிக எடையுடன், குறைமாதப் பிரசவத்தில் பிறக்கும்.  பிறக்கும் போதே குழந்தைக்கு  ரத்தசர்க்கரையின் அளவு மிகக் குறைவாக இருக்கலாம்.

கர்ப்ப கால நீரிழிவைக் கட்டுப்படுத்தாமல், அலட்சியப்படுத்தினால் குழந்தை தாயின் வயிற்றிலேயே இறந்து போகவும் கூடும். பிரச வத்துக்குப் பிறகு  போடப்படுகிற தையல் ரணம் அத்தனை சீக்கிரம் ஆறாது. எளிதில் இன்ஃபெக்ஷன் ஏற்படும். எனவே கர்ப்ப கால  நீரிழிவு வந்தால், அதை அவர்களது  எதிர்கால நீரிழிவு பாதிப்புக்கான அலாரமாக எடுத்துக் கொண்டு, கர்ப்பத்தின் போதும், பிரசவத் துக்குப் பிறகும் கவனமாக இருக்க வேண்டும். உடல்  பருமன் கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைக்கு அசைவு இல்லா விட்டால் உடனே எச்சரிக்கையாகி, மருத்துவரைப் பார்க்க வேண்டும்.  மருத்துவரின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாமல் பின் பற்ற வேண்டும்…’’ என்கிறார் மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிறப்பு சிகிச்சை  நிபுணர்.

Related posts

சிறப்பான திருமண வாழ்க்கைக்கு சிறந்த டிப்ஸ்!….

sangika

எடை குறைப்புக்கு இந்தப்பழதை சாப்பிடுங்கள்!…

sangika

எடையைக் குறைக்க உதவும் சாக்லேட் ஸ்மூத்தி!…

sangika

கர்ப்பிணிகளுக்கு சிவப்பான குழந்தை பிறக்க இயற்கை வழிமுறைகள்

nathan

உடல் எடையை எளிதாக குறைக்க கூடிய பொடி!….

sangika

Animal workout பலராலும் விரும்பப்படுவதற்கான காரணம் இதுதானாம்!…

sangika

அற்புத பயிற்சியே மூச்சு பயிற்சி பிராணாயாமம்….

nathan

கால்களில் உள்ள அதிகப்படியான சதை குறைய…

nathan

அகமும் சார்ந்ததே அழகு!

nathan