மருத்துவ குறிப்பு

மனைவி அதிகம் சம்பாதிப்பதால் உங்களுக்குள் இந்த எண்ணங்கள் எழுந்ததுண்டா?

80-களில் அரிதாக மனைவி வேலைக்கு போகும் போது மட்டுமல்ல, இன்று 2010-களில் கணவனுக்கு இணையாக மனைவி வேலைக்கு போகும் போதும் கூட மனைவி தன்னைவிட அதிக பொறுப்பில், அதிக சம்பளம் வாங்குகிறார் எனும் போது கணவன் மனதில் சந்தோஷம் இருப்பினும், ஒரு மூலையில் சிறு நெருடலும் இருக்கும்.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது சமூகம் தான். “என்னப்பா உன் பொண்டாட்டி உன்னவிட அதிகம் சம்பாதிக்கிறா?” ; “அவனுக்கென்ன அவன் வேலைய விட்டாலும், அவன் பொண்டாட்டி காசுல உட்கார்ந்து சாப்பிடலாம்.” இன்னும் பல வாக்கியங்களை நையாண்டியாக பேசி, நன்றாக இருந்த குடும்பத்தில் கும்மியடித்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
இப்படிப்பட்ட ஒரு நிலை வீட்டில் உண்டானால், கணவன் மனதில் என்னென்ன எண்ணங்கள் எழ வாய்ப்புகள் உள்ளன என இங்கு காணலாம்

10 1499673763 1அதிகாரம்!
வீட்டின் அதிகாரம் மனைவி கைக்கு சென்றுவிடுமோ. வரவு, செலவில் துவங்கி, என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என அவர் முடிவு எடுக்கும் நிலை பிறந்துவிடுமோ என்ற அச்சம் ஆண்கள் மனதில் எழுகிறது.

10 1499673774 2சொல் பேச்சு.
மனைவி அதிகம் சம்பாதிக்கிறார், தன்னைவிட புத்திசாலியாக இருக்கிறார் என்பதால், அவர் தன் பேச்சை கேட்காமல், தன்னை அவமானப்படுத்திவிடுவாரோ என்ற எண்ணமும் ஆண்கள் மனதில் அதிகம் எழுகிறது.

10 1499673783 3உற்றார், சுற்றார்.
வீட்டில் மனைவி சாந்தமாக இருப்பினும்.. கணவன், மனைவி உறவு சுமூகமாக நகர்ந்தாலும். இந்த உற்றார், சுற்றார்கள் ஏதாவது ஏளன பேச்சு பேசிவிடுவார்களோ என்ற பயம். இதனால் தெருவில் தலை நிமிர்ந்து நடக்க முடியாதோ என்ற எண்ணங்கள் பிறக்கும்.

10 1499673807 5சந்தேகம்!
மனைவி மீது இருந்த அதிக பாசம், அதிக சந்தேகமாக மாறும். அலுவல் வேலையாக நேரதாமதம் ஆனால் கூட, இவள் தன்னைவிட அதிகம் சம்பாதிப்பதால் தான் இப்படி நடந்துக் கொள்கிறார் என எண்ணுவர்.

10 1499673763 1அறிவுரை.
மனைவி எப்போதும் போல அக்கறையாக அறிவுரை கூறினாலும் கூட, இவள் சம்பாதிக்கும் திமிரில் பேசுகிறாள் என எண்ணுவர்

ஆண் தோழர்கள்!
அதிக ஆண் தோழர்கள் இருந்தால் சந்தேகம் ஏற்படும். தன் மீது இருக்கும் விருப்பம், காதல் குறைந்துவிடுமோ என்ற அச்சம் எழுமாம்.

உதவி!
இதில் என்ன தவறு இருக்கிறது, மனைவி அதிகம் சம்பாதிப்பது குடும்ப பொருளாதாரத்திற்கு தான் பெரும் உதவியாக இருக்கும். அதனால், குடும்பத்தை எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் நடத்த முடியும் என சில சூப்பர் ஹஸ்பென்ட்ஸ் கூறியுள்ளனர்.

எதிர்காலம்!
மனைவி அதிகம் சம்பாதிப்பதால். தன் ஊதியத்தை குடும்பம் நடத்தவும். அவரது ஊதியத்தை எதிர்கால திட்டங்கள் செயற்படுத்த, குழந்தைகளை சிறந்த முறையில் வளர்க்க உதவியாக இருக்கும் என இந்த தலைமறை கணவன்மார்கள் கூறியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button