முகப் பராமரிப்பு

முகப்பரு இருக்கும் போது பேசியல் செய்யலாமா?

அலுவலகத்திற்கு செல்லும் பெண்கள், நேரமின்மையின் காரணமாக இயற்கையான முறையில் பருக்களை போக்க கூடிய சில ரெமிடிகளை டிரை செய்ய முடியாது. அதற்காக நீங்கள் பார்லர் செல்ல விரும்புவீர்கள். ஆனால் நீங்கள் பார்லர் செல்ல சரியான நேரம் எது என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

பெண்களுக்கு தங்களை அழகாக காட்டி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அவர்கள் சரியான வழிமுறைகளை தேர்ந்தெடுப்பதில்லை. முகப்பருவுடன் பேசியல் செய்து கொள்ளலாமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதற்கான விடையை இந்த பகுதியில் காணலாம்.

பேசியல் :
பேசியல் செய்யும் போது மசாஜ் செய்துவது தான் முக்கியமான சிகிச்சை முறையாகும். உங்களுக்கு முகப்பருக்கள் புதிதாக இருந்தால், நீங்கள் பருக்களுடன் பேசியல் செய்வது சிறந்ததாக இருக்க முடியாது. எனவே பருக்கள் குறைந்ததும் பேசியல் செய்து கொள்ளுங்கள்.

முகப்பருவிற்கான பேசியல்
கிளியரான ஸ்கின் வேண்டும் என்பது அனைவரது ஆசையாக இருக்கும். அதற்காக முகப்பருவிற்கான பேசியல் செய்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் ஒருமுறை மட்டும் முகப்பருவிற்கான சிகிச்சை எடுத்து விட்டு கிளியரான சருமத்தை எதிர்பாத்தால் அது நடக்காது. தொடர்ந்து பேசியல் செய்ய வேண்டும்.

எப்போது செய்யலாம்?
பேசியல் செய்ய நீங்கள் முடிவு செய்துவிட்டால், உங்களது விடுமுறை நாட்களில் பேசியல் செய்வது நல்லது. ஏனெனில் பேசியல் செய்த பிறகு ரிலாக்ஸாக இருப்பது மிக மிக அவசியம். அப்போது தான் நல்ல பலன் கிடைக்கும். பேசியல் செய்த பின்னர் வெயிலில் செல்வது, நீண்ட தூர பயணம் போன்றவை வேண்டாம்.

முகப்பரு போகுமா?
நீங்கள் முகப்பருவிற்கான பேசியல்களை எடுத்துக்கொண்டால் நிறைய பருக்கள் இருந்தால், உடனடி தீர்வு கட்டாயம் கிடைக்காது. பிரச்சனையின் அளவிற்கேற்ப காலம் வேறுபடும். ஆனால் வெள்ளை பருக்கள், கருப்புள்ளிகள் மற்றும் தழும்புகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை?
முகப்பருவிற்கான பேசியலை 4 முதல் 6 வாரங்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். பேசியல் செய்ய குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும்.

தரமான பார்லர்

பேசியல் செய்ய தரமான பார்லர்களை தேர்ந்தெடுங்கள். அவர்கள் உபயோகப்படுத்தும் பேசியல் க்ரீம்கள் தரமானதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். முகத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்களும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.
முன்னரே கூறியது போல முகப்பருக்களின் தீவிரம் குறைந்ததும், பேசியல் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் முகப்பருக்கள் அதிகமாக வாய்ப்புள்ளது.21 1500630935 6

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button