மருத்துவ குறிப்பு

வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் ஓர் அற்புத வழி!

தற்போது பலரும் அவஸ்தைப்படும் ஒரு பிரச்சனை தான் வாய் துர்நாற்றம். இந்த வாய் துர்நாற்றத்தைத் தடுக்க எத்தனையோ மௌத் வாஷ்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவற்றில் ஆல்கஹால் இருப்பதால், தினமும் உபயோகப்படுத்தும் போது, பற்களைக் கடுமையாக பாதிக்கும்.
bad breathe 19 1476863015 07 1483785682
எனவே வாய் துர்நாற்றத்தைத் தடுக்க கண்ட கண்ட மௌத் வாஷ்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டிலேயே கெமிக்கல் இல்லாத மௌத் வாஷ்களைத் தயாரித்துப் பயன்படுத்தி வாருங்கள். இங்கு வாய் துர்நாற்றத்தைப் போக்கும் நேச்சுரல் மௌத் வாஷை எப்படி தயாரிப்பதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
07 1483785505 1 water
ஸ்டெப் #1
ஒரு கண்ணாடி ஜாரில் 1 கப் நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
07 1483785520 2 vinegar
ஸ்டெப் #2
பின் அதில் 1/2 கப் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்துக் கொள்ள வேண்டும். வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம், கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும்.
07 1483785533 3 cloves
ஸ்டெப் #3
3-4 கிராம்பை எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் 1 டீஸ்பூன் கிராம்பு பொடியை எடுத்து கலவையுடன் கலந்து கொள்ள வேண்டும்.
07 1483785542 4 mint
ஸ்டெப் #4
பின்பு 5 துளிகள் புதினா எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனால் புதினா வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.
07 1483785555 5 lemon
ஸ்டெப் #5
அடுத்து சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ளவும். இதனால் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், பற்களில் உள்ள கறைகளைப் போக்கி, வெண்மையாக வைத்துக் கொள்ளும்.
07 1483785563 6 strainer
ஸ்டெப் #6
இறுதியில் கண்ணாடி பாட்டிலை மூடி குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமில்லா இடத்தில் ஒரு வாரம் ஊற வைக்கவும். பின் அந்த கலவையை வடிகட்டினால், நேச்சுரல் மௌத் வாஷ் ரெடி!
07 1483785573 7 mouthwash
ஸ்டெப் #7
ஒவ்வொரு முறை மௌத் வாஷைப் பயன்படுத்தும் போதும், நன்கு குலுக்கி பின்பே பயன்படுத்த வேண்டும்.
07 1483785582 8 mouth wash
குறிப்பு
இந்த மௌத் வாஷ் கொண்டு வாயைக் கொப்பளித்த பின், நீரால் வாயைக் கழுவ வேண்டிய அவசியம் இல்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button