சரும பராமரிப்பு

கழுத்து கருமையை போக்கும் ஆரஞ்சு

உடல் எடை அதிகமாக இருப்பது, தைராய்டு சுரப்பி குறைபாடு மற்றும் அதன் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றம், அதிகமாக மருந்துகள் சாப்பிடுவது, புற்றுநோய் போன்றவற்றால் கழுத்தை சுற்றி கருப்பான படிமம், அக்குள் மற்றும் முகத்தில் கருமை நிறம் ஏற்படுகிறது. நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் கருமை நிறத்தை போக்குவது குறித்து பார்க்கலாம்.

ஆரஞ்சு பழத்தை பயன்படுத்தி கருமை நிறத்தை மாற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மஞ்சள் ஆரஞ்சு பழம். கஸ்தூரி மஞ்சள் பொடியுடன் ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். கழுத்தை சுற்றியுள்ள கருமைநிற பகுதியில் தடவி சிறிது நேரத்துக்கு பிறகு கழுவினால் கருமை நிறம் மாறும். உருளைக்கிழங்கை பயன்படுத்தி கருமை நிறத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு, அதிமதுரப்பொடி. உருளைக்கிழங்கை தோல் சீவி சாறு எடுக்கவும். இதனுடன் அதிமதுரப் பொடி சேர்க்கவும். இவற்றை கலந்து பூசிவர கழுத்து மடிப்பு உள்ளிட்ட இடங்களில் உள்ள கருமை நிறம் படிப்படியாக குறையும். இயல்பான தன்மை வரும். உருளைக்கிழங்கு அற்புதமான மருந்தாக விளங்குகிறது. வெள்ளரி சாறை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

கொண்டை கடலை, வெள்ளரி, எலுமிச்சை. கொண்டை கடலை மாவு அல்லது கடலை மாவு எடுக்கவும். இதனுடன் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இதை கழுத்தை சுற்றி போட்டவும். சிறிது நேரம் கழித்து வெந்நீரில் கழுவிவர கருமை மறையும். கோதுமையை பயன்படுத்தி கருமை நிறத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கோதுமை, தேன்.

கோதுமையை நீர்விட்டு ஊறவைத்து பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் தேன் சேர்த்து கலந்து கழுத்தை சுற்றி போட்டு மசாஜ் செய்தால் கருமை நிறம் மாறுவதுடன் தொற்றுகள் ஏற்படாது. உதடுகளில் ஏற்படும் வெடிப்பை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். பனி, மழைக்காலத்தில் உதடுகளில் வெடிப்பு ஏற்படும். சுண்ணாம்பு தெளிவு நீரில் வெண்ணெய் சேர்த்து கலந்து உதட்டின் மீது தடவிவர உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் சரியாகும். 1456221895 803

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button