கர்ப்பிணி பெண்களுக்குமருத்துவ குறிப்பு

பிரசவம் ஆன பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படக் காரணம் என்ன?

 

பிரசவம் ஆன பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படக் காரணம் என்ன?

குழந்தை பிறந்தவுடன் உள்ளுக்குள், ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறுபட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற்றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடாது.

அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு வர குறைந்தபட்சம் ஆறு வார காலம் ஆகும். சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், காயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் நேரம் பிடிக்கும்.

குழந்தை பிறந்தவுடனேயே அத்தனை நாளும் பெரிதாகி, குழந்தையைத் தாங்கி ஏந்திய தாயின் கர்ப்பப்பை மெதுமெதுவாக பழைய நிலைக்கு வந்துவிடும். அந்தச் சமயத்தில் ரத்தப்போக்கு வருவது இயற்கை. 4 முதல் 5 வாரங்கள் வரைக்கும் இந்த ரத்தப் போக்கு நீடிக்கும்.

அதற்குமேல் போனால் தவறு. தாயின் கர்ப்பப்பையில் நோய்த்தொற்று ஏதேனும் ஏற்பட்டிருந்தால் இப்படி ஆகலாம். சில சமயம் தாயின் கர்ப்பப்பையில் நஞ்சின் பாகங்கள் அல்லது சில திசுக்கள் வெளி வராமல் விட்டுப் போயிருந் தாலும் அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படலாம்.

இப்படி ஆகும் போது மருத்துவரை அணுகுவதுதான் சரி. மருந்து மாத்திரைகள் மூலம் அவரால் தான் இதற்கு நிரந்தரத் தீர்வு கொடுக்க முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button