மருத்துவ குறிப்பு

அடுத்தவர் விஷயத்தில் தலையீடு வேண்டாமே

அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். அடுத்தவர் செய்யும் காரியங்களில் தென்படும் குறைபாடுகளை ஒப்பிட்டு பார்த்து மனதை சாந்தப்படுத்த முயற்சிப்பது தவறான பழக்கமாகும்.

அடுத்தவர் விஷயத்தில் தலையீடு வேண்டாமே
அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடுவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். நம்முடைய விஷயங்களை தவிர மற்றவர்களின் விஷயங்களில் மூக்கை நுழைப்பதும், அவர்களை பற்றி சிந்திப்பதும் நேரத்தை வீணடிக்கும் செயல் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆழ்ந்து கவனித்து பார்த்தால் பெரும்பாலானோர் மற்றவர்களை பற்றி சிந்திப்பதிலேயே தங்களுடைய பெரும்பகுதி நேரத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.

‘அவர் ஏன் அப்படி இருக்கிறார்? அவர் ஏன் இப்படி இல்லை?’ என்று மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களாக வந்து ஆலோசனை கேட்டால் உங்கள் விருப்பங்களை சொல்வதில் தவறில்லை. வலிய சென்று ஆலோசனை சொல்ல நினைப்பது உங்கள் மதிப்பை குறைத்துவிடும்.

மற்றவர்களுடைய காரியங்களில் கவனம் செலுத்துவது இழப்பையே ஏற்படுத்தும். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தும் போக்குதான் மேலிடும். அதனால் தேவையான விஷயங்களில் கவனம் செலுத்த தவறிவிடக்கூடும். எந்தவொரு காரியத்தை கையில் எடுத்தாலும் அதன் மீது கவனம் செலுத்துவது அவசியம்.

அப்போதுதான் அதனை சிறப்பாக செய்து முடிக்க முடியும். தவறுகள் நேர்ந்தால் திருத்திக்கொள்ளவும் முன்வர வேண்டும். அதைவிடுத்து அடுத்தவர் செய்யும் காரியங்களில் தென்படும் குறைபாடுகளை ஒப்பிட்டு பார்த்து மனதை சாந்தப்படுத்த முயற்சிப்பது தவறான பழக்கமாகும். 201707310931398385 no intervention in the matter of others SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button