ஆரோக்கியம் குறிப்புகள்

வெங்காயத்துடன் இதை சேர்த்து சாப்பிடுவதனால் உடம்பிலுள்ள கெட்ட சளி பறந்து போயிடும் தெரியுமா?

ஒருவருக்கு சளி பிடிப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். அதில் ஒன்று தான் காலநிலை மாற்றம். காலநிலை திடீரென்று மாறும் போது பலருக்கும் சளி பிடிக்கும். இந்நிலையில் வரும் சளி தொல்லைத் தரும் வகையில் இருக்கும். சளி பிடித்தால், அதிலிருந்து விடுபட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், சளியை வெளியேற்ற இயற்கை வழிகளை நாடுங்கள்.

இதனால் சளி எளிதில் உடலில் இருந்து வெளியேறுவதோடு, உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். இக்கட்டுரையில் சளித் தொல்லையில் இருந்து எளிதில் விடுபட உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

வழி #1
சளியை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கு இஞ்சி டீ, மஞ்சள் பால் அல்லது சுடுநீர் போன்றவற்றைக் குடியுங்கள். மேலும் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரால் தினமும் இரண்டு வேளை கொப்பளியுங்கள்.

வழி #2
கண்களுக்கு கீழே கன்னப் பகுதியில் சுடுநீரில் நனைத்த துணியால் தினமும் பலமுறை ஒத்தடம் கொடுங்கள்.

வழி #3
வெங்காய சாற்றில் தேன் கலந்து தினமும் ஒரு ஸ்பூன் குடிப்பதன் மூலமும், தீராத சளியில் இருந்து விரைவில் விடுபடலாம்.

வழி #4
சளி அதிகம் பிடித்தால், மூக்கடைப்பு பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். இந்நேரத்தில் ஆவி பிடியுங்கள். இதனால் சளி இளகி, வெளியேற ஆரம்பித்து, மூக்கடைப்பில் இருந்தும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வழி #5
சளி பிடித்தவர்களுக்கு முள்ளங்கி மிகவும் நல்லது. இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும், ஆன்டி-செப்டிக் பண்புகளும் ஏராளமாக உள்ளது.cold

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button