சிற்றுண்டி வகைகள்

வெந்தய தயிர் பச்சடி

என்னென்ன தேவை?

முளைக்கட்டிய வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன்,
கெட்டி தயிர் – 1½ கப்.

தாளிக்க:

கடுகு – 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்,
பொடித்த காய்ந்த மிளகாய் – 2,
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெந்தயத்தை ஊறவைத்து துணியில் மூட்டையாக கட்டி, 8 மணி நேரத்திற்கு தொங்க விடவும். முளை கட்டி விடும். இதை ஆவியில் 5 நிமிடம் வேகவிட்டு எடுத்து ஆறவிடவும். தயிருடன் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். இத்துடன் வெந்த வெந்தயத்தை கலந்து, கடாயில் தாளிக்க கொடுத்ததை தாளித்து, வெந்தயக்கலவையில் கொட்டி கலந்து பரிமாறவும்.sl526717

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button