இவ்வாறான அனுபவங்கள் உங்களுக்கு உண்டா? அப்போ நீங்க கண்டிப்பாக யாரையோ லவ் பண்ணுறீங்க!

நீங்கள் ஒருவர் மீது காதல் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை தொடுதல்கள், முத்தமிடுதல், போன்ற ரொமேன்டிக்கான அனுபவங்கள் மூலம் மட்டுமின்றி சில ரொமெண்டிங் அல்லாத செயல்கள் மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம். அது என்னென்ன ரொமெண்டிக் அல்லாத அனுபவங்கள் என்பதை காணலாம்.

#1
உங்களுக்கு குழந்தைகளை பிடிக்காது என்றாலும் கூட உங்களது லவ்வரின் வீட்டு குழந்தை உங்கள் மடியில் அமர்ந்தால் உங்களுக்கு பிடிக்கும்.

#2
அவரை காணும் போது உங்களை கட்டுப்படுத்துவது கடினமானதாகிவிடும். ஆயிரம் பட்டாம்பூச்சிகள் உங்கள் வயிற்றில் பறந்து கொண்டிருக்கும்.

#3
அவருக்கு பிடித்த உணவுகளை சாப்பிட உங்களுக்கு தெரியாமலேயே நீங்கள் பழகிக்கொள்வீர்கள்.

#4
உங்களது உடல் எடை, பருக்கள், குறைவான முடி போன்ற சில விஷயங்களை அவர்களிடம் மறைக்க நினைக்கமாட்டீர்கள்.

#5
ஒரு முழு பிட்சாவை கூட அவர் என்ன நினைப்பாரோ என்ற கவலை இன்றி அவர் முன் சாப்பிட்டு முடித்துவிடுவீர்கள்.

#6
நீங்கள் சாப்பிட்ட உணவு துணுக்குகள் உங்கள் பற்களின் இடைவெளிகளில் உள்ளது என அவர் சொன்னால், நீங்கள் அலறி அடித்துக்கொண்டு வாஷ்ரூம்மிற்குள் செல்லமாட்டீர்கள்.

#7
அவரிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் அலசி ஆராய்ந்து பேசிக்கொண்டிருக்கமாட்டீர்கள்.

#8
அவர் உங்களோடு இருக்கும் சமயத்தில் உங்கள் நெருக்கமான நண்பர்கள் உடன் இல்லாததை நினைத்து கவலைப்படமாட்டீர்கள்.

#9
நீங்கள் எவ்வளவு சோகமாக இருந்தாலும் சரி, அவர் உங்களது வயிறு புண்ணாகும் அளவிற்கு உங்களை சிரிக்க வைத்துவிடுவார்.

Leave a Reply