​பொதுவானவை

பெண்கள் வன்முறையில் இருந்து தப்பிக்க வழிகள்

பெண்கள் வன்முறையில் இருந்து தப்பிக்க வழிகள்
எந்த ஆபத்திலும் தப்பிப்பதற்கு நமக்கு ஒரு சான்ஸ் இருக்கத்தான் செய்யும். அது எது, என்று சிந்தித்து செயல்படவேண்டும் என்றால் நீங்கள் பயப்படக்கூடாது. பயம் ஏற்பட்டால் நீங்கள் தடுமாறிவிடுவீர்கள்.* இந்த மாதிரியான அதிரடி தாக்குதலை நீங்கள் நடத்தவேண்டும் என்றால், கராத்தேபயிற்சி அவசியம். எதிரியின் காதோடு சேர்த்து காலால் இப்படி தாக்கினால், அவருக்கு தலையே சிதறிப்போவது போல் தோன்றும். இந்த மாதிரி அடி வாங்கியவர் பின்பு எழமாட்டார். பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிப்பவரை இப்படி தைரியமாக தாக்கலாம்.* கட்டிப்பிடிக்க முயற்சித்து நெருங்கி வருகிறவரை இப்படி அடித்து வீழ்த்த வேண்டும். அவரை பலம் கொண்டு இரு பக்கமும் பிடித்து, பலமான கால் மூட்டால் உதைக்கவேண்டும். சூழ்நிலைக்கு தக்கபடி எந்த இடத்தில் தாக்க வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு அடிக்கலாம். நெஞ்சு, அடிவயிறு, மர்ம உறுப்பு பகுதி எங்கு வேண்டுமானாலும் இந்த உதை கொடுக்கலாம். நீங்கள் எவ்வளவு பலமாகத் தாக்கினாலும் உங்கள் காலுக்கு வலிஏற்படாது.* நேருக்கு நேராக ஒருவர் வந்து நெருங்கி தொடுதல், கட்டிப்பிடித்தல், வம்பு செய்தலில் ஈடுபட்டால் இந்த ‘எல்போ அட்டாக்கை பயன்படுத்துங்கள். எதிரியில் வலது காலை, உங்கள் வலதுகால் மூலம் கட்டுக்குள் வைத்துக் கொண்டு உங்கள் இடது கையால் எதிரியின் வலது கையை பற்றிப் பிடித்துக் கொண்டு அவரது இடுப்பு பகுதியை உங்கள் வலது முழங்கையால் தாக்க வேண்டும்.

தாக்கும் போது விரல்களை மடக்கிக் கொள்ள வேண்டும். இந்த முறையில் பலமாக தாக்கினால், அடி வாங்குபவரின் இடுப்பு எலும்பு முறிந்துபோகும். தாக்குதலில் எதிரி நிலைகுலைந்து விழும்போது நீங்கள் உதவி கேட்டு சத்தம் போட்டபடி அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு ஓடிவிடவேண்டும்.

* புத்தகத்தை ஒரு கையில் ஏந்தியபடி கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கும்போது பின்பக்கமாக ஒருவர் வந்து உங்களை தூக்கவோ, கழுத்தில் கிடக்கும் நகையை பறிக்கவோ முயற்சித்தால், எல்போ அட்டாக்கில் இந்த முறையை பின்பற்றுங்கள். உங்கள் கைமூட்டு எதிரியின் கழுத்துப் பகுதியை தாக்கவேண்டும்.

அந்த சூழ்நிலையில் எதிரியின் உடலில் எங்கெல்லாம் தாக்க வாய்ப்பு கிடைக்குமோ அங்கொல்லாம் தாக்கலாம். நீங்கள் உட்கார்ந்திருக்கும் போது எதிரி உங்களை அமுக்க முயற்சித்தால் உங்கள் முட்டியால் அடி வயிறு, மர்மபகுதியிலும் தாக்குதல் தொடுக்கலாம். அடி விழும்போது, அந்த நபர் உங்களை பற்றிப்பிடித்திருந்தாலும், தடுமாறுவார். அப்போது நீங்கள் தப்பித்து ஓடிவிடலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button