27 1498543368 1garlicpeels
தலைமுடி சிகிச்சை

கொத்து கொத்தா முடி கொட்டுதா? இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க!!

முடி கொட்டுவதும் நரை முடி உண்டாவதும் இன்றைய காலக்கட்டத்தில் சிறு குழந்தைகளுக்கும் சகஜமாக போய் விட்டது. இதனை தடுப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வந்த பின் புலம்புவதுதான் நம்மில் பாதி பேர்.

நரை முடியாகட்டும், முடி உதிர்தல் ஆகட்டும் வந்த பின் பழையபடி கொண்டு வருவது அத்தனை எளிதல்ல. இதற்கு மாதங்கள் சிறிது எடுத்தாலும், சிரத்தையாக இங்கு சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை செய்தால் நல்ல பலனை தரும். நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்.

27 1498543368 1garlicpeelsபூண்டுத் தோல் : முடி அடர்த்தியாக வருவதற்கு பூண்டு தோல் நல்ல பலனைத் தரும். கொத்துக்கொத்தாக முடி உதிர்வதைத் தடுக்கப் பூண்டுத்தோல் 50 கிராம் எடுத்து தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைக்க வேண்டும். இதனை மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து, தலையில் அதிக சொட்டையுள்ள இடத்தில தடவிவர வேண்டும். இபப்டி செய்தல முடி அடர்த்தி பெற்று விரைவில் புதிய முடிக்கற்றைகள் வளரும்.

நரை முடிக்கு : கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையாக அரைத்து, அதனுடன் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இதனைதினமும் சிறிது தேய்த்து வந்தால் நரைமுடி கருப்பாக மாறிவிடும்.

இள நரைக்கு : கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து சாப்பிட்டால் இள நரை பிரச்சனைக்கு முடிவு கட்டலாம். செய்வதற்கு எளிதுதானே

நீலி பிருங்காதி தைலம் எப்படி செய்வது: அவுரி (நீலி), கரிசலாங்கண்ணி (பிருங்காதி) இந்த ரெண்டையும் சம அளவு எடுத்துக்கிட்டு, இவற்றை விட 3 மடங்கு அதிகமா தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சுங்கள். இதை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் சகல முடி பிரசனைகளும் நரையும் குணமாகும்.

சொட்டை விழாமல் தடுக்கும் மூலிகை எண்ணெய் : செம்பருத்தி பூ – 5 (புதியப் பூ அல்லது காய்ந்த பூ) செம்பருத்தி இலை – 3 முதல் 5 இலைகள் தேங்காய் எண்ணெய் – 1 கப் துளசி – 5 இலைகள் வெந்தயம் – சிறிதளவு

செய்முறை:- செம்பருத்தி பூ மற்றும் இலை, துளசிகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி பிறகு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த விழுதை போட்டு மிதமான தீயில் வைத்து இதனுடன் வெந்தயம் மற்றும் துளசி இலைகளை சேர்த்த உடனேயேஅடுப்பிலிருந்து இறக்கி விடவும். ஆறியபின் 4 நாட்களில் வெயில் வைத்துவிடுங்கள். பிறகு வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும். குளிக்க செல்லும் முன், சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முறை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.27 1498543368 1garlicpeels

Related posts

இளமையிலேயே தலைமுடி நரைக்க முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா…?

nathan

பொடுகைப் போக்க தலைக்கு பேக்கிங் சோடாவை எப்படி பயன்படுத்துவது?

nathan

கட்டாயம் இதை படியுங்கள்..பெண்களையும் பாதிக்கும் வழுக்கை!

nathan

இளநரையை குணப்படுத்தும் துளசி..! இதை முயன்று பாருங்கள்….

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள்!

nathan

ஹெல்மட் அணிவதால் ஏற்படும் தலைமுடி உதிர்வைத் தடுக்க சில அற்புத வழிகள்!

nathan

இளநரைக்கான வீட்டு சிகிச்சை

nathan

தலைமுடி ஆரோக்கியமாக இருக்க ஆண்கள் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!

nathan

வெள்ளை முடியால் உங்களுக்கு கவலையா?

nathan