மருத்துவ குறிப்பு

வாய் துர்நாற்றமா? யாரும் பக்கத்துல வரதில்லையா? இத வெறும் 5 நாட்கள் சாப்பிட்டா போதும்!

நாம் முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்கள் முகம் சுழித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அவர்கள் முகம் சுழிக்க இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று நீங்கள் பேசும் பேச்சு பிடிக்காமல் இருப்பது, மற்றொன்று உங்களது வாய் துர்நாற்றம்.

ஒரு சிலர் இதனை முகத்திற்கு நேராக சொல்லிவிடுவார்கள். ஆனால் பலர் இதனை உங்களிடம் சொல்லமாட்டார்கள். ஆனால் மற்றவர்களிடம் சொல்லி உங்களது மரியாதையை கெடுத்துவிடுவார்கள். காரணமும் குணப்படுத்தும் முறையையும் இப்போது பார்க்கலாம்.

என்ன காரணம்? வாய் துர்நாற்றம் ஏற்பட பல், ஈறுகளில் ஏற்படும் பிரச்சனை ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி மூக்கு, தொண்டை, மூச்சுக் குழல், நுரையீரல், உணவுக் குழல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் உண்டாகும் நோய்களும் இதற்கு அடுத்த கட்ட காரணமாக இருக்கும். சரியாக பல் துலக்காமல் இருப்பது, சாப்பிட்டதும் வாய் கொப்பளிக்காமல் இருப்பது, சாப்பிடாமல் இருப்பது போன்றவை வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணங்களாகும்.

தாவர தங்கம் கேரட் : கேரட் பல சக்திகளை உள்ளடக்கியதால் தாவர தங்கம் என்றழைக்கப்படுகிறது. நீங்கள் சுத்தமாக பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வீசுகிறதா? அப்படி என்றால் இதற்கு வயிற்றிலிருக்கும் கோளாறுதான் காரணம். எனவே வயிறு குறைபாட்டை ஒழித்தால்தான் அந்த வாய் துர்நாற்றம் போகும்.

5 நாட்கள்! காரட் சாறு எடுத்து, சர்க்கரை மற்றும் உப்பு என எதுவும் சேர்க்காமல் வெறுமனே குடிக்க வேண்டும். இப்படி 5 நாட்களுக்கு சாப்பிட்டால் உங்கள் வாய் துர்நாற்றம் நீங்கி வாயில் நறுமணம் வீசும். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கையும் பெருகும்.

கறை உள்ளதா? பற்களில் கரை இருந்தால் உங்கள் அழகே போய்விடும். எனவே பற்களில் கறை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக காரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும்.

தேன், எலுமிச்சை, பட்டை: தேன் ஒரு ஆன்டி பாக்டீரியல் ஏஜண்டாக செயல்படுகிறது. பட்டை கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டது. எலுமிச்சையில் பிளிச்சிங் ஏஜண்ட் உள்ளது. இதனை கொண்டு வாய்துர்நாற்றத்தை போக்குவது எப்படி என்பது பற்றி காணலாம்.

தேவையான பொருட்கள்: தேன் – ஒரு டீஸ்பூன், பட்டை – அரை டீஸ்பூன், எலுமிச்சை – 2, வெதுவெதுப்பான நீர் – 1 கப் சோட உப்பு – ஒரு டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை: ஒரு பாட்டிலில் தேன், பட்டை, எலுமிச்சை சாறு, வெதுவெதுப்பான நீர், சோடா உப்பு ஆகியவற்றை ஒன்றாக ஒரு பாட்டிலில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும். இந்த நீரைக்கொண்டு ஒரு நாளைக்கு பத்து முறைகளாவது வாயினை கொப்பளியுங்கள். வாய்துர்நாற்றம் காணாமல் போய்விடும்.

மவுத் வாஷ் பயன் தருமா? மவுத் வாஷ்களை வாயை புத்துணர்வாக வைத்துக்கொள்ள பயன்படுத்தலாம். ஆனால் இதனை அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். அடிக்கடி பயன்படுத்தினால் வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களோடு சேர்ந்து நல்ல பாக்டீரியாக்களும் அழிந்து விடும். நல்ல பாக்டீரியாக்கள் அழிந்தால் ஆரோக்கிய பிரச்சனை ஏற்படும்.

24 1500889429 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button