முகப் பராமரிப்பு

வீட்டிலேயே ஃப்ரூட் பேசியல் செய்வது எப்படி?

பொதுவாக விஷேசங்களுக்கும், முக்கியமான இடங்களுக்கும் செல்லும் போது முகம் அழகாகவும், வசீகரமாகவும் இருக்க வேண்டும் என்பது நம் அனைவரது விருப்பமும் ஆகும்.
ஃபேசியல் செய்வதால் முகம் பளிச்சென மாறும். பேசியல் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. கெமிக்கல்கள் நிறைந்த பேசியலை செய்வதை காட்டிலும், இயற்கை முறையில் பேசியல் செய்வது நல்ல பலனை தரும்.

வசீகரமான முகத்திற்கு நீங்கள் பார்லர் சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே எளிமையான முறையில் ஃப்ரூட் பேசியல் செய்வது எப்படி என்பது பற்றி காணலாம்

கிளேன்சிங்
முகத்தை பேசியலுக்கு தயார்ப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இதற்காக முதலில் க்ளென்சிங் செய்ய வேண்டும். இதற்கு பாலினை பஞ்சில் தொட்டு முகத்தில் மசாஜ் செய்யலாம். அல்லது நீங்கள் பாதம் எண்ணெய் கொண்டு கூட முகத்திற்கு மசாஜ் செய்து சுத்தமாக துடைத்து விடலாம்.

ஸ்கிரப் முகத்தை நன்றாகவும், இயற்கையான முறையிலும் ஸ்க்ரப் செய்ய சர்க்கரை உதவுகிறது. சிறிதளவு கரும்பு சக்கரையுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து வட்ட வடிவில் 3 – 5 நிமிடங்கள் மென்மையாக முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் முகத்தை நீரில் கழுவி விட வேண்டும்.

மசாஜ் முகத்திற்கு மசாஜ் செய்வது முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்திற்கு பொலிவை உண்டாக்கும். வாழைப்பழம் அல்லது பப்பாளிப்பழத்தை அரைத்து அதனை முகத்தில் இட்டு 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

ஆவி பிடித்தல் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரில் ஆவி பிடிப்பதால் முகத்தில் உள்ள அழுக்குகள், துளைகளில் தங்கிய அழுக்குகள் நீங்கும்.

பேஸ் பேக் 1: முகத்திற்கு பேக் போட நீங்கள் எந்த பழங்களை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக தக்காளியை எடுத்து நன்றாக அரைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து இதனை கழுவி விட வேண்டும்.

பேஸ் பேக் 2: ஆப்பிளை நன்றாக அரைத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

பேஸ் பேக் 3: வாழைப்பழத்தை நன்றாக அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

டோனிங் மற்றும் மாய்சுரைசிங் டோனிங் மற்றும் மாய்சுரைசிங் செய்வதற்காக வெள்ளரி சாறுடன் எலுமிச்சை சாறு கலந்தோ அல்லது ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்தோ முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

பலன்கள் 1. முகத்தில் உள்ள இறந்த செல்களை நீங்குகிறது. 2. விட்டமின்கள் அதிகமாக உள்ளது. 3. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. 4. சருமத்தை மிருவதுவாகவும், ஈரப்பதமாகவும் பராமரிக்க உதவுகிறது. 5. வயதான தோற்றத்திலிருந்து பாதுகாக்கிறது.

31 1501496750 14 1447504809 charcoalfacial

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button