அழகு குறிப்புகள்

சருமம் காக்கும் கற்றாழை

சருமம் காக்கும் கற்றாழை

காட்டுச்செடியாக வளர்ந்து கிடக்கும் கற்றாழை, சருமத்துக்கு அளிக்கும் நன்மைகள் அதிகம். மேலும் இது சருமத்துக்கு  மட்டுமின்றி, கூந்தலுக்கும் பெரிதும் உதவுகிறது. குறிப்பாக முகப்பருவை நீக்கச் சிறந்த பொருள் என்றால் அது கற்றாழைதான்.ஏனெனில், இதில் ஆன்டிபாக்டீரியல் பொருட்கள் அதிகம். முகப்பருவைக் குறைக்க கற்றாழையைத் தினமும் தடவி வந்தால் போதும். கற்றாழையில் ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. எனவே சருமத்தில் இருக்கும் பாக்டீரியா அழிவதோடு, பருக்களால் சருமத்தில் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.

வறட்சியான சருமமாக இருந்தால், கற்றாழையின் ‘ஜெல்’லை முகத்துக்குத் தடவி வரலாம். அது சருமத்தை ஈரப்பசையுடன் வைப்பதோடு, மென்மையாக்கும். குறிப்பாக பெண்கள் அளவான மேக்கப் போட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி ஊறவைத்து, கழுவி பின் மேக்கப் போட்டால் நன்றாக இருக்கும்.

உடல் எடை அதிகரிக்கும்போது அல்லது கர்ப்ப காலத்தில் உடலில் ‘ஸ்டிரெச் மார்க்’குகள் தோன்றும். அதை நீக்குவது கடினம். ஆனால் கற்றாழையை வைத்து, மார்க்குகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், அந்தத் தடயங்கள் மெதுமெதுவாக மறைய ஆரம்பிக்கும். தொடர்ந்து வெயிலில் அலைந்தால், சருமம் கருத்துவிடும்.

அதுவும் தவிர சில நேரங்களில் கரும்புள்ளிகள், பழுப்பு நிறச் சருமம் போன்றவை ஏற்படும். இவ்வாறு தொடர்ந்து சூரியக்கதிர்கள் சருமத்தில் பட்டால், தோல் புற்றுநோய் அபாயம் கூட ஏற்படலாம்.

எனவே எப்போது வெளியே செல்வதாக இருந்தாலும், சருமத்தின் ஈரப்பதத்தைக் காக்கும் ஏதேனும் மாய்சரைசரை தடவிக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் சருமத்தை பாதிப்பில் இருந்து தடுக்கலாம். இதற்கு கற்றாழை ஜெல் மிகவும் பயனுள்ளதாக  இருக்கும்.

Related posts

அழகு குறிப்புகள்:மேனியை மெருகூட்ட!

nathan

சூட்டை கிளப்பி விடும் உடையில் க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள பிரபல இளம் நடிகை..!

nathan

கவலை வேண்டாம்..!! வறண்ட உதடுகளா உங்களுக்கு?

nathan

beauty tips .. முகப்பரு தழும்புகள் நீக்கும் முறைகள்

nathan

சரும சுருக்கத்தைப் போக்கும் விளக்கெண்ணெ!!!

nathan

அழகு குறிப்புகள்:பயத்தம் பருப்பில் பளபளப்பு!

nathan

இந்த வீடியோவில் ஒரு சூப்பரான நைட் கிரீம் தயாரிக்கும் முறையை பற்றி பார்க்கலாம்.

nathan

இதை செய்து பாருங்கள் ..! உதட்டை பெரிதாகக்க வேண்டுமா..?

nathan

நயன்தாராவிற்கு நடிகை நமிதாவிற்கும் இடையே சண்டையா..

nathan