தலைமுடி சிகிச்சை

கூந்தலை பராமரிக்கும் வழி முறைகள்

‘வெயில் காலத்தில் அழகையும் காக்க வேண்டும்; அதன்மூலம் ஆரோக்கியத்தையும் காக்க வேண்டும் என்றால் இவற்றையெல்லாம் பின்பற்றுங்கள்” என்கிறார் நறுமண சிகிச்சை மற்றும் அழகுக்கலை நிபுணரான கீதா.

வியர்வைச் சுரப்பிகள் அதிகமாக வேலைசெய்யும் காலம் இது. இதனால் கூந்தலின் வேர்ப்பகுதியில் உள்ள துவாரங்களில் அழுக்கும், எண்ணெய்ப்பசையும் சேர்ந்து அடைத்துக் கொண்டுவிடும். இதன் எதிரொலியாக ரத்த ஓட்டம் தடைபடுவதாலும், போதிய ஆக்ஸிஜன் கிடைக்காததாலும் கொத்துக் கொத்தாக முடி கொட்டத் தொடங்கும்.

அதனால் வெயிலில் செல்லும்போது தொப்பி, ஸ்கார்ஃப் கொண்டு தலையை நன்றாக கவர் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நேரடியாக வெயில் தலையில் படும்போது மெலனின் குறைபாடும், தலைமுடி மெலிவதும் ஏற்படும்.பலருக்கு பொடுகுத்தொல்லை அதிகமாவதும் வெயில் காலத்தில்தான். மெழுகுபோன்ற திரவம் தலையில் சுரப்பதே இதற்கு காரணம்.

முதல்நாள் இரவு 5 மி.லி விளக்கெண்ணெய் மற்றும் 5 மி.லி நல்லெண்ணெய் இரண்டையும் கலந்து முடியின் வேர்க்கால்களில் மசாஜ் செய்துவிட்டு, மறுநாள் காலை அதிக கெமிக்கல் இல்லாத மைல்டு ஷாம்பூ போட்டு, இதமான நீரில் தினசரி தலைக்கு குளிக்க வேண்டும். குளிக்கும் நீரில் ஆப்பிள் சிடர் வினிகர்(Apple cider vinegar) அல்லது எலுமிச்சைச்சாறு 10 ட்ராப்ஸ் போட்டு குளிப்பதால் தலையில் பிசுபிசுப்பு இருக்காது.

தினசரி தலைக்கு குளித்தால் முடி கொட்டும் என்று நினைப்பார்கள். அது தவறு. தினசரி தலைக்குக் குளிப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தைத் தணிப்பதால் முடி கொட்டுவது நின்றுவிடும். வார இறுதி நாட்களில் திக்கான தேங்காய் பால் 2 டேபிள் ஸ்பூன், அரை டீஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் ஈவினிங் ப்ரைம்ரோஸ் ஆயில் 1 கேப்சூல் கட் செய்து மூன்றையும் கலந்து முடியின் வேர்க்கால்களில் தடவி 2 மணிநேரம் ஊறவைத்து குளிப்பதால் வாரம் முழுவதும் உடலில் ஏற்படும் உஷ்ணத்தை சமப்படுத்தலாம்.

சோற்றுக்கற்றாழையை பிளந்து உள்ளே ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் வைத்து ஸ்டஃப் செய்து கயிறால் நன்றாக கட்டி வைத்துவிட வேண்டும். இரண்டு நாள் கழித்து வெந்தயம் முளை விட்டிருக்கும். ஒரு ஸ்பூனால் கற்றாழை ஜெல்லோடு வெந்தயத்தை எடுத்து மிக்ஸியில் அரைத்து, அதனுடன் 1/4 டீஸ்பூன்நல்லெண்ணெய் மற்றும் 1/4 டீஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து தலைப்பகுதியில் தடவி 2 மணிநேரம் கழித்து குளித்தால் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

10 செம்பருத்திப்பூக்களோடு தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொண்டு, குளிர்தாமரைத் தைலம் 2 டீஸ்பூன் கலந்து தலையில் தடவி குளிப்பதால் உச்சந்தலை குளிர்ந்து, முடி வறண்டு உடைவது தடைபடும்.ld4613013

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button