​பொதுவானவை

காதல் திருமணத்தை பெற்றோர் எதிர்க்க காரணம்

 

காதல் திருமணத்தை பெற்றோர் எதிர்க்க காரணம்

ஆனால் சில நேரங்களில் தனக்கு வரப்போகும் மருமகனை உங்கள் பெற்றோர் நிராகரிக்கலாம். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. பொதுவாக பெற்றோர்கள் ஏன் காதல் திருமணத்தை எதிர்க்கிறார்கள் என்பதை பார்க்கலாம்…

• ஒரே ஜாதி அல்லது மதத்தில் தான் திருமணம் நடக்க வேண்டும் என்பது பல குடும்பங்களில் நிலவி வரும் வலுவான நம்பிக்கையாகும். தற்போதைய தலைமுறையினருக்கு இதன் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை.

• சில நேரம் பெற்றோர்கள் அல்லது உடன் பிறந்தவர்கள் கூட பழமைவாதிகளாக இருப்பதில்லை; மாறாக அடுத்த நிலை உறவுகளான மாமாக்கள், அத்தைகள், தாத்தாக்கள், பாட்டிகள் போன்றவர்கள் பழமைவாதிகளாக இருக்கலாம். அவர்களுக்கு காதல் திருமணம் என்பது செய்யக்கூடாத பாவ செயல் என்று நினைப்பார்கள். அவர்கள் திருமணத்தைப் பற்றி, ஜாதிகள் மற்றும் பண்பாடுகளைப் பற்றி கடுமையான கருத்துக்களை கொண்டிருக்கலாம். இதனால் குடும்ப சொந்தங்களுக்கு மரியாதை அளிப்பதா அல்லது நல்லிணக்கத்திற்கு தோல் கொடுப்பதா என குழம்பி போவார்கள் உங்கள் பெற்றோர்கள். இதுவே உங்கள் காதல் திருமணத்திற்கு தடையாக இருக்கும்.

• சில நேரங்களில் கலப்பு திருமணங்களையும், ஜாதி விட்டு ஜாதி மாறி செய்யும் திருமணங்களையும் பெற்றோர்கள் ஏற்றிருக்கின்றனர். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த திருமணங்கள் தோல்வியில் முடிந்தால், குடும்பங்கள் இதற்கு எதிராக மாறி விடுகின்றனர்.

• தங்கள் மகளுக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை இப்படி தான் இருக்க வேண்டும் என பெற்றோர்கள் மனக்கோட்டை கட்டி வைத்திருப்பார்கள். இந்த காரணத்திற்காக திருமணத்தை நிராகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது தான். ஆனாலும் சில நேரங்களில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் பிடிக்கவில்லை என்றால் உணர்ச்சி ரீதியாக பணிய வைத்து திருமணத்தை நிராகரிப்பார்கள்.

• குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் மட்டும் அனைத்து திருமணங்களும் தோல்வியடைவதில்லை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள சம்பந்தமே திருமணம். ஒரு வேளை இருவருக்கும் இடையே புரிதல் இல்லையென்றால், அவர்களுக்கு இடையேயான பந்தம் முறியத் தொடங்கும். இப்படி தோல்வியில் முடிவதற்கு அனைவரும் கூறும் ஒரே காரணம் – பெரியவர்களின் சம்மதம் இல்லாமல் நடந்ததால் தான் திருமணம் உடைந்தது.

• சிலர் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் நாளடைவில் அவர்களுக்குள் குற்ற உணர்வு உண்டாகும். இந்த உணர்ச்சி அதிகரிக்கும் போது, தன் துணையின் மீது உரையாடல் வாயிலாக அல்லது செயல்களின் வாயிலாக எதிர்மறையான விதத்தில் நடக்க தொடங்குவார்கள். இதனால் துணையின் மனதில் ஒருவித வெறுப்பு ஏற்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button