உடல் பயிற்சி

நடைப்பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

நடைப்பயிற்சியின் போது கவனிக்க வேண்டியவை

நடப்பதற்கு முன் ஏதாவது சாப்பிடலாமா?நிச்சயம் சாப்பிடலாம் கீழே கொடுத்துள்ளபடி முறையாகச் சாப்பிட்டு விட்டு நடக்கலாம். முழு கோதுமை பிரட், வாழைப்பழம். சாப்பிடுவது வயிற்றை நிரப்புவதாக இல்லாமல் குறைந்த அளவாக இருக்க வேண்டும். கொழுப்பு நிறைந்ததாக இருக்கக் கூடாது. நடப்பதற்கு 1 மணி நேரம் முன்னதாக சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் நீரும் அருந்த வேண்டும்.

நடையில் வேகம் எப்படி இருக்க வேண்டும்?

நடையை மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். இதனால் நமது தசையும், மூட்டுக்களும் நடைக்குத் தயாராகும். அதேபோல் நமது இதயத்தின் செயல்பாடும், ரத்த ஓட்டமும் மெதுவாக, சீராக அதிகரிக்கும். இதுவே உடலுக்கு நல்லது. நடையின் முடிவில் 10 நிமிடம் வேகத்தை சீராகக் குறைத்து வந்து மெதுவாக அமர்ந்து இருந்தால் இதயமும், இரத்த ஓட்டமும் சீராகக் குறைந்து பழைய நிலைக்கு வரும். இதனால், அதிக களைப்பு, மயக்கம்

ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.

நல்ல நடைப்பயிற்சி தூரம் எவ்வளவு?

பொதுவாக நல்ல உடல்நிலையிலுள்ளோர் 10 நிமிட நடையில் 1 கிலோ மீட்டர் தூரம் நடக்கலாம். ஆனால் இது ஒவ்வொருவரின் உடல் நலம், நடக்கும் விதம், நடக்கும் நில அமைப்பு ஆகியவற்றினால் மாறும்.

நடக்கும்போது கைகளில் எடை வைத்துக் கொள்ளலாமா?

பளு இல்லா நடையே சிறந்தது. கைகளில் எடையுடன் நடந்தால் நடப்பதில் சிரமம் ஏற்படும். ரத்த அழுத்தம் கூடும். மூட்டுகளில் உள்ள ஜவ்வுகள் சேதமாகலாம். தனியாக எடை தூக்கும் பயிற்சி வைத்துக் கொள்வதே சிறந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button