சரும பராமரிப்பு

கரும்புள்ளிகள் போய்விட பாட்டி வைத்தியங்கள்

வைத்தியம் #1 1 டீஸ்பூன் வேர்க்கடலை எண்ணெயுடன், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ கரும்புள்ளிகள் உருவாவது தடுக்கப்படும்.
20 1482222473 1 peanutoil
வைத்தியம் #2 வெந்தயக் கீரையை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலமும், கரும்புள்ளிகளைப் போக்கலாம்.
20 1482222482 2 fenugreek
வைத்தியம் #3 தேன் மருத்துவ குணம் நிறைந்த ஒரு பொருள். அந்த தேனை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் மீது தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
20 1482222489 3 honey
வைத்தியம் #4 முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, கரும்புள்ளிகளை முற்றிலும் போக்கலாம்.
20 1482222496 4 egg
வைத்தியம் #5 பாதி எலுமிச்சையைப் பிழிந்து, அதில் 3-4 துளிகள் தேனை சேர்த்து கலந்து, கரும்புள்ளிகள் இருக்கும் மூக்கு, கன்னம், தாடை போன்ற பகுதிகளில் தடவி 5 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.
20 1482222504 5 lemon

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button