​பொதுவானவை

பெண்களே காதல் தோல்வியிலிருந்து விடுபட வழிகள்

 

பெண்களே காதல் தோல்வியிலிருந்து விடுபட வழிகள்

காதல் இரண்டு வகை உண்டு. ஒன்று திருமணத்திற்கு முன், இன்னொன்று திருமணத்திற்கு பின். இந்த இரண்டு வகைகளால் காதல் பிரியும் போது, ஏற்படும் துயரத்தில் இருந்து பிரிவது என்பது மிகவும் கடினம்.

அப்படிப்பட்ட காதல் பிரிவு துயரத்தில் இருந்து மீள்வதற்கு ஒருசில வழிகள் உள்ளன. அந்த வழிகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றி அந்த துயரத்தில் இருந்து வெளிவர முயற்சி செய்யுங்கள்.

• ஆரம்பத்தில் நம் துணைவர் மற்றொரு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருப்பதை நம் மனம் ஏற்காது. முதலில் நம்ப மறுக்கும். நாம் இருக்க வேண்டிய இடத்தில் மற்றொருவர் என்பதை முற்றிலும் மனம் ஏற்க இயலாது.

• பிரிவு நிச்சயம் என்று தெரிந்த பின் உங்களால் ஆத்திரத்தை அடக்க இயலாது. உடல் நிலை மோசமாக மாறும். எந்த செயலையும் செய்ய முடியாது. வேலைக்கு செல்லாமலும், அன்றாட வேலைகளையும் செய்ய முடியாமலும், எப்போதும் காதல் நினைவையே மனம் நாடும். நடந்தவற்றையே நினைத்து சிந்தித்து கொண்டிருப்பர்.

பின் பொருட்களை தூக்கி உடைப்பது, கத்துவது, அனைவரிடமும் சண்டை போடுவது மற்றும் தன் சுய கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்வது போன்றவைகள் நிகழும். அழுது புலம்புவர். சில நாட்களுக்கு பின் இந்த நிலை மாறும். ஆனால் மனதில் வலி மட்டும் வேரூன்றி இருக்கும். இந்த நிலை போக போக சரியான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும்.

• ஆரம்பத்தில் வன்முறை செயலில் ஆத்திரம் கொண்டு, பின் அந்த வலியிலிருந்து மீண்டு, மனமானது கல்லாகி, ஒரு சாதாரண நிலையை அடைந்திருப்பீர். இந்த நிலையில் தான் பொதுவாக நீங்கள் சமரச கருத்து தொடங்குவது அல்லது விவாகரத்து பற்றிய முடிவு எடுப்பது நடக்கும். ஆழமான காயம் கொண்டிருந்தாலும், நடைமுறை வழக்கிற்கு ஏற்றவாறு முடிவு எடுப்பது நல்லது. அதை விட்டு பழி வாங்குவது என்பது முட்டாள்தனம். ஆகவே இந்த நேரத்தில் துயரத்திலிருந்து வெளிவர வாழ்க்கையின் இலக்குகளை அடைய மிகுந்த ஆர்வத்தை காட்டலாம் அல்லது திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதை பற்றி யோசித்து முடிவெடுக்கலாம். • உங்கள் துணைவருடன் சென்றிருந்த சில இடங்கள், பொருட்கள், மற்றும் நினைவூட்டும் அனைத்தையும் மனதில் இருந்து அழிப்பது நல்லது. காதல் கொண்ட வேளையில் கேட்ட சில பாடல்கள், அவர்களுடன் சென்ற ஹோட்டல்கள் அல்லது அவர்கள் கூறிய வார்த்தைகள், அவர்களால் ஏற்பட்ட நட்பு, உறவுகள் போன்ற அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. • காதல் தோல்வி அடைந்த உடனே வேறு ஒருவரை நம்பி திருமணம் செய்து கொள்ள வேண்டாம். சில நாட்கள் கழித்து பழகி, பேசி, ஒருவரை புரிந்து பின் திருமணம் முடிப்பது நல்லது. உங்கள் வாழ்க்கைக்கு மற்றொரு நபரை தேர்ந்தெடுக்கும் முன் யோசித்து செயல்பட வேண்டும். இதனால் மறுபடியும் ஏமாற்றம் அடையாமல் இருக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button