சரும பராமரிப்பு

உச்சி முதல் உள்ளங்கால் வரை எப்படி அழகு படுத்தலாம் -சித்த மருத்துவம்

ஆரோக்கியம் மட்டுமல்லாது அழகையும் தருகிறது. அப்படி இயற்கை வழியில் உங்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை எப்படி அழகு படுத்தலாம் என்பதுதான் இங்கே சொல்லப்பட்டுள்ளது.

முகம் உடனடியாக பளிச்சிட:
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவவேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

தேவையற்ற முடியை அகற்ற :
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும்இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

கூந்தல் பிசுபிசுப்பை நீக்க :
கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், முட்டையின் வெள்ளைக் கருவில் கொஞ்சம் சர்க்கரையை கலந்துதலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடிஅழகு பெறும்.
Alasche 32
கூந்தல் பளபளப்பாக :
தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக்குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

வெயிலில் கறுத்து போகாமலிருக்க :
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம்குரு வராமல், வெயிலில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

கண்கள் பிரகாசமாக இருக்க :
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள்பிரகாசமாக இருக்கும்.

மூட்டு கறுப்பை போக்க :
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றைதேய்த்து வந்தால் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button