சரும பராமரிப்பு

சருமத்தில் ஏற்படும் கருமையான திட்டுக்களை சரிப்படுத்த 4 வழிகள்!!

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு…என்ற பாடல் மிகவும் புகழ்பெற்றது. பலருக்கும் பிடித்த நிறம் கருப்பாக இருக்கலாம். ஆனால் வெண்மையான சருமத்தில், கருமையான திட்டுகள் ஏற்படும்போது யாருக்குத்தான் பிடிக்கும். இந்த திட்டுக்கள் சிறிய அளவிலும் இருக்கலாம். பெரிய அளவிலும் இருக்கலாம். இவை சருமத்திற்கு எந்தஒரு ஒரு தீங்கையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் பார்ப்பதற்கு ஒரு ஆரோக்கியம் இல்லாத சருமமாக தோற்றமளிக்கிறது.

மெலனோசிட் என்ற நிறமி உற்பத்தியால் சருமத்திற்கு நிறம் கிடைக்கிறது. மெலனோசிட், மெலனினை உற்பத்தி செய்கிறது . இதுவே சருமத்திற்கு நிறத்தை தருவதாகும். மெலனோசிட் சேதமடையும்போது அல்லது ஆரோக்கியகுறைவு ஏற்படும்போது குறிப்பிட்ட இடங்களில் அதிகமான மெலனின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் அந்த இடங்கள் மட்டும் அதிக கருமை நிறம் உண்டாகிறது..

சருமத்தில் இந்த நிற மாற்றம் ஏற்பட பல வாய்ப்புகள் உண்டு. அவற்றுள் சில சூரிய ஒளி அதிகமாக படுவது, காயத்தினால் ஏற்படும் சரும சேதம், ஹார்மோன் மாறுபாடு, சீரற்ற முடி திருத்தம் , ஒவ்வாமை, பாரம்பரியம்.

உருளை கிழங்கு: தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 1 தண்ணீர் – சிறிதளவு

செய்முறை: ஒரு உருளை கிழக்கை எடுத்து பாதியாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய பாகத்தில் சில துளி தண்ணீரை சேர்க்கவும். கருமை படிந்த பகுதியில் அந்த உருளை கிழங்கை சூழல் வடிவில் தேய்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து வெந்நீரால் அந்த இடத்தை கழுவவும். ஒரு நாளில் 3-4 முறை, ஒரு மாதம் தொடர்ந்து செய்யலாம்.

எலுமிச்சை மற்றும் மஞ்சள்: தேவையான பொருட்கள் : எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

செய்முறை: எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூளை ஒரு கிண்ணத்தில் போட்டு கலக்கவும். முகத்தை நன்றாக கழுவிவிட்டு, இந்த கலவையை சருமத்தில் தடவவும். நன்றாக அந்த இடத்தை காய விடவும். 15 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் அந்த இடத்தை கழுவவும். ஒரு நாளில் ஒரு முறை , உறங்க செல்வதற்கு முன் இதனை செய்யலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்: தேவையான பொருட்கள்: ஆப்பிள் சீடர் வினிகர் – 1 ஸ்பூன் தண்ணீர் – 2 ஸ்பூன் செய்முறை: ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் சேர்த்து கலக்கவும். திட்டுகள் உள்ள இடத்தில் அந்த கலவையை தடவவும். 5 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு வெந்நீரால் அந்த இடத்தை கழுவவும். ஒரு நாளைக்கு 2 முறை இதனை செய்யலாம்.

முன்னெச்செரிக்கை : நேரடியாக சூரிய ஒளி படுவதை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுதல், தனிப்பட்ட சுகாதாரம், இயற்கையான முறையில் இந்த சரும நிற மாற்றத்தை குறைப்பதற்கான வழிகளை இப்பொது பார்க்கலாம். மேற்கூறிய குறிப்புகளை தொடர்ந்து முயற்சித்து வர, நல்ல மாற்றம் தெரியும்.

blackheads 03 1507030479

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button