சரும பராமரிப்பு

அழகிற்காக டால்கம் பவுடரை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா?

அழகாக இருக்க வேண்டும். பிறர் முன்னால் தன்னை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று சந்தையில் விற்கும் எல்லா பொருட்களையும் வாங்கி பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள்.

இதில் நேர விரயமானது, பணம் விரயமானது தான் மிச்சம் என்று அலுத்துக் கொள்பவர்களும் உண்டு. அவசரமாக எங்காவது கிளம்பும் போது நாம் அழகாக தெரியவேண்டும் ஆனால் அவ்வளவாக நேரம் செலவழிக்க முடியாது என்று நினைப்பவர்களுக்காக சில டிப்ஸ்.

ஷாம்பு :
டால்கம் பவுடர் உங்கள் தலையில் உள்ள எண்ணெய் பசையை உறியும் தன்மை கொண்டது.
தலைக்கு ஷாம்பு போட முடியாத சூழல் எனும் போது தலையில் டால்கம் பவுடரை தூவிடுங்கள். இது உங்கள் தலையில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை உறிந்து கொள்ளும்.

ஐ லேஷஸ் : ஐ லேஷஸ் அணிவதற்கு முன்னதாக டால்கம் பவுடர் தூவி அணிந்து கொள்ளுங்கள். இதனால் ஐ லேஷஸ் திக்காக தெரியும். அதே போல மஸ்கரா போடுவதற்கு வசதியாக இருக்கும்.

லிப்ஸ் ஸ்டிக் : லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்க வேண்டுமானால் லிப்ஸ்டிக் அணிந்த பின் டால்கம் பவுடரால் லேசாக ஒத்தி எடுத்திடுங்கள். இல்லையென்றால் லிப்ஸ்டிக் அணிந்த பிறகு உதடுகளை மறைக்கும் வண்ணம் மெல்லிய டிஸ்ஸூ பேப்பரைக் கொண்டு மறைத்துக் கொள்ளுங்கள். இப்போது டால்கம் பவடரைக்கொண்டு உதட்டினை தடவிக் கொடுங்கள்.

வேக்ஸிங் : வேக்ஸிங் செய்வதற்கு முன்னால் டால்கம் பவுடரை தூவிக் கொள்ளுங்கள். இதனால் வேக்ஸிங் பெயின் அதிகளவு இருக்காது. இப்படி தூவுவதால் பவுடர் நம் சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை உறிந்து விடுகிறது. இதனால் நாம் எளிதாக வேக்ஸ் செய்யலாம். நல்ல பலனும் கிடைக்கும்.

செட்டர் :
மேக்கப் எல்லாம் முடிந்த பிறகு லேசாக டால்கம் பவுடரைக் கொண்டு ஒத்தி எடுங்கள். இது சிறந்த மேக்கப் செட்டராக செயல்படும். மேக்கப் அதிக நேரம் இருக்கச் செய்திடும்.

மணல் : பீச்களில், மணலில் விளையாடி வரும் குழந்தைகள் கை, கால்களில் மணல் இருக்கும். என்ன தான் உதறினாலும் சில மெல்லிய துகள்கள் நீங்காது நம் உடலிலேயே இருக்கும். அதனை நீக்க டால்கம் பவுடரைக் கொண்டு தேய்த்தால் உடலில் ஒட்டியிருக்கும் மணல் துகள்கள் எல்லாம் உதிர்ந்திடும்.

வியர்வை : அதிக வியர்வையினாலோ அல்லது டைட்டான உடை அணிந்த நம்முடைய சருமம் சிவந்து, அரிக்கும் போது டால்கம் பவுடர் போடலாம். அதே சமயம், சருமம் உடனடியாக ட்ரை ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள் டால்கம் பவுடர் பயன்படுத்தலாம்.

ஷூ : ஷூ அல்லது செருப்பில் அதிக நாற்றமெடுத்தால் டால்கம் பவுடரை தூவினால் வாசம் மறைந்திடும். தூவப்படும் டால்கம் பவுடர் ஷூவில் இருக்கும் ஈரப்பசையை உறிந்து விடுவதால் நாற்றம் இருக்காது.
26 1506424642 5

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button