28.4 C
Chennai
Thursday, May 16, 2024
ஆரோக்கிய உணவு

கம்மங்கூழ் குடிங்க… தொப்பையும் குறையும், சூடும் தணியும்

அடிக்கிற வெயிலுக்கு குடிக்க எது கிடைச்சாலும் குளிர்ச்சியாக இருக்குமா? என்ற ஒரே கேள்வி மட்டுமே, இன்றைய தினம் நமக்குள் ஊடுருவி நிற்கிறது. இதை பயன்படுத்தி போலி கூல்டிரிங்ஸ், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பழரசங்களின் விற்பனை, கடைகளிலும், ெதருக்களிலும் கல்லா கட்டுகிறது. குளிர்ச்சியோடு, உடலுக்கு ஊட்டமளிக்கும் எத்தனையோ பாரம்பரிய உணவுகளை இயற்கை, நமக்கு கொடையாக வழங்கியுள்ளது. அந்த வகையில் சூட்டைத் தணித்து, உடலுக்கு ஊட்டமளிக்கும் ‘கூல்’ பானம், கம்மங்கூழ் ஆகும்.

கம்மங்கூழ் செய்முறை :

கம்பு பயிரில் இருக்கும் கற்களை முதலில் நீக்க வேண்டும். பின்பு அதனை குளிர்ந்த நீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு பின்பு, ஊறிய கம்பை உரலில் கொட்டி உலக்கையால் பாதிஉடையும் அளவுக்கு இடிக்க வேண்டும். விறகு அடுப்பில் ஒரு மண்பானையில், சுடுநீரை காய்ச்ச வேண்டும். நன்றாக கொதித்த நீரில், இடித்து வைத்த கம்பை, கொட்டி களிக்குச்சால் நன்றாக கிளறி விடவேண்டும். அரைமணி நேரத்தில் கமகம வாசத்தில் கம்மஞ்சோறு தயாராகி விடும். கம்மஞ்சோறு நன்றாக ஆறிய பின்பு, அதனை சுத்தமான தண்ணீரில் கலந்தால் கம்மங்கூழ் ரெடி. இயற்கையாகவே கம்பு குளிர்ச்சியானது.

அதனை மண்பானையில் ஊற்றி வைக்கும் போது குளிர்ச்சியும், சுவையும் மேலும் அதிகரிக்கும். கம்மங்கூழில் நறுக்கிய பெரிய வெங்காயம், மாங்காய், தயிர் கலந்து அருந்தும் போது, அதன் சுவைக்கு கண்டிப்பாக நமது நாவுகள் அடிமையாகும். உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்”

கம்மங்கூழின் பயன்கள் :

சர்க்கரையை குறைக்கும் சக்தி கம்மங்கூழுக்கு இருக்கு. பெருத்த வயிறும் குறையும். உடம்புக்குக் குளிர்ச்சியூட்டி உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தும். ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்கும். பனிக்காலம் தவிர, எல்லாக் காலங்களுக்கும் ஏற்றது கம்மங்கூழ். குடிச்சு தான் பாருங்களேன்.

Related posts

உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

nathan

இரத்த சோகை வராமல் தடுக்கும் கறிவேப்பிலை இட்லி பொடி!

nathan

சமையல் பாத்திரங்களின் வகைகளும்.. அவற்றில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளும்..

nathan

காலை உணவில் இஞ்சியை சேர்க்கலாமா? தெரிஞ்சிக்கோங்க!

nathan

மருத்துவ குணம்மிக்க பப்பாளி – தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பரான கீமா டிக்கி

nathan

சுவையாக இருந்தாலும் அதிகமாக உட்கொள்ளும்போது உடலுக்கு தீங்கையே விளைவிக்கும்!..தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிந்துகொள்வோமா? ஆரோக்கியம் தரும் இயற்கை உணவு

nathan

உங்களுக்கு தெரியுமா திப்பிலியோட இந்த பொருள் சேர்த்து சாப்பிட்டா பரலோகம்தானாம்?

nathan