சரும பராமரிப்பு

தழும்பை போக்க விட்டமின் ஈ யை எப்படி பயன்படுத்தலாம்?

களங்கமற்ற முகம் அனைவரையும் ஈர்க்கும். முகத்தில் பருக்கள் தோன்றி அதனால் ஏற்படும் தழும்புகள் விரைவில் போகாது. அவற்றை போக்க சில இயற்கை தீர்வுகள் உண்டு. அவற்றை பயன்படுத்தி தழும்புகளை மறைய செய்யலாம். அப்படி பட்ட தீர்வுகளில் ஒன்று வைட்டமின் ஈ எண்ணெய். தழும்புகளை போக்குவதில் வைட்டமின் ஈ எண்ணெய்யின் பங்கை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

களங்கமற்ற முகம் அனைவரையும் ஈர்க்கும். முகத்தில் பருக்கள் தோன்றி அதனால் ஏற்படும் தழும்புகள் விரைவில் போகாது. அவற்றை போக்க சில இயற்கை தீர்வுகள் உண்டு. அவற்றை பயன்படுத்தி தழும்புகளை மறைய செய்யலாம். அப்படி பட்ட தீர்வுகளில் ஒன்று வைட்டமின் ஈ எண்ணெய். தழும்புகளை போக்குவதில் வைட்டமின் ஈ எண்ணெய்யின் பங்கை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தழும்புகளை போக்குகிறது: தோல் புற்றுநோய் குணமானதும், உண்டாகும் தழும்புகள் மறைய 90% வாய்ப்புகள் இந்த வைட்டமின் ஈ எண்ணெய்யை பயன்படுத்தும்போது இருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஏற்படும் தழும்புகள் , நீங்காத வடுவாக மாற வாய்ப்பில்லாமல் , ஒரு நாளில் மூன்று முறை வைட்டமின் ஈ எண்ணெய்யை பயன்படுத்தும்போது மறைகிறது. மற்றும் காயத்தை சுற்றி தழும்பு திசுக்கள் ஏற்படாமல் தடுக்கிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அறுவை சிகிச்சைக்கு பின்னர் வைட்டமின் ஈ எண்ணெய்யை காயத்தின் மீது தொடர்ந்து தடவுவதால் காயங்கள் விரைவில் குணமாகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வைட்டமின் ஈ எண்ணெய்யை உணவாக அல்லது மாத்திரையாக உள்ளுக்குள் எடுத்துக் கொள்வதால் வேறு பல நன்மைகளும் உடலுக்கு கிடைக்கிறது.

வைட்டமின் ஈ மாத்திரைகள்: சரும சேதத்திற்கு வைட்டமின் ஈ மாத்திரைகள் சிறந்த தீர்வை தருவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. காயங்களை ஆற்ற உடலுக்கு பல விதங்களில் உதவி புரிகிறது. வைட்டமின் ஈ சத்து , உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளான ப்ரீ ரேடிக்கல்களிடம் இருந்து உடல் திசுக்களை காக்கின்றன. இந்த கூறுகள் வயது முதிர்வை ஊக்குவிக்கின்றன. இந்த கூறுகள் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியையும் பாதிக்கின்றன. சிவப்பு இரத்த அணுக்கள் உடல் முழுதும் ஆக்ஸிஜனை செலுத்தும் முக்கிய பணியில் உள்ளவையாகும்.

வைட்டமின் ஈ உணவுகள்: உணவின் வழியே இந்த சத்தை எடுத்துக் கொள்வது நல்லது. இலைகளை உடைய பச்சை காய்கறிகள் , நட்ஸ், தானியங்கள் போன்றவற்றில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது.

அதிகமான வைட்டமின் ஈ மாத்திரைகளை எடுத்துக் கொள்வது உடலுக்கு தீங்கானது. இயற்கையான முறையில் ஒரு நாளைக்கு 1000 மிகி அளவும், செயற்கை முறையில் 670 மிகி அளவும் எடுத்துக் கொள்ளலாம். அதிக அளவு வைட்மன் ஈ எடுத்துக் கொள்ளும்போது, இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும் , இரத்த போக்கை அதிகரிக்கும் . மூளையில் இரத்தபோக்கை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வைட்டமின் ஈ சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மை தரும்.

almond 06 1507287560

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button