அறுசுவை​பொதுவானவை

சீஸ் பை

தேவையானவை:

மைதா மாவு – 4 கப் (all purpose flour)
பேக்கிங் பவுடர் – 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1 1/2 கப் (சூடு படுத்தியது)
சர்க்கரை – 2 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
ஈஸ்ட் – 2 டீஸ்பூன்
ஆயில் – 1/2 கப்

 
ஸ்டப்பிங் செய்ய:
கட் செய்த மொற்சரில்லா சீஸ் – 1 கப்
ஃபிட்ட சீஸ் – 1 கப்
கொத்தமல்லி – சிறிதளவு

Lebanese Cheese Pie
செய்முறை:
மிதமான சூடுள்ள தண்ணீரில் ஈஸ்ட் போட்டு கலந்து 5 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும். மாவுடன் உப்பு, சர்க்கரை,  பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து வைக்கவும். பின் அதில் ஈஸ்ட் கரைசலை ஊற்றி அத்துடன் ஆயில் சேர்த்து சாப்பாத்தி மாவு  பதத்திற்கு நன்கு அழுத்தி பிசைந்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு எண்ணெய் தடவிய பாத்திரத்தில் பிசைந்த மாவை போட்டு 4 மணி நேரம் மிதமான சூடுள்ள இடத்தில் வைத்திருக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் கட் செய்த மொற்சரில்லா சீஸ், உதிர்த்த ஃபிட்ட சீஸ், பொடியாக வெட்டிய  கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
ரவுன்டாக உருட்டிய மாவின் நடுவில் கால் டீஸ்பூன் ஆயில் விடவும். அதன்மேல் ஒரு தேக்கரண்டி சீஸ் கலவையை வைத்து, சிறிது மைதாமாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட்டாக்கி ஓரம் முழுவதும் தடவும். அதேபோல் அடுத்தபுறமும் மடக்கிவிட்டால்  இதுமாதிரி சதுரவடிவில் பைபோல் கிடைக்கும்.
பின்னர் அதனை ஆயில் தடவிய ட்ரேயில் வைத்து 325 டிகிரி சூடு செய்த ஓவனில் 15 அல்லது 20 நிமிடம் வைத்து  எடுக்கவும். சுவையான லெபனீஸ் சீஸ் பை தயார்.

Related posts

சுவையான மிளகு வடை ரெடி….

sangika

ரவா கேசரி எப்படி செய்வது?

nathan

மாசி கருவாட்டு தொக்கு செய்வது எப்படி…..

sangika

முட்டை தோசை

nathan

இவை இரண்டையும் சூப் செய்து குடித்தால் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் ஏற்படுமாம்…..

sangika

பெண்களின் அன்பை பெற எளிய அறிவுரைகள்

nathan

கத்திரிக்காய் பிரியாணி

nathan

nathan

வெற்றிலை நெல்லி ரசம்

nathan