தலைமுடி சிகிச்சை

உங்க வறண்ட கூந்தலுக்கு…வீட்டிலேயே ஷாம்பு இருக்கு தெரியுமா…

சுற்றுச்சூழல் மாசடைந்த இந்த உலகில் நம் கூந்தலை பாதுகாப்பது என்பது கடினமான செயலாகிவிட்டது. இருப்பினும் நம் கூந்தலை பாதுகாக்க பல ஷாம்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவற்றை பயன்படுத்துவதால், அதில் கலந்துள்ள கெமிக்கல்கள் நம் தலையில் உள்ள இயற்கையாகவே கூந்தலில் இருக்கும் எண்ணெய் பசையையும் நீக்கி வறட்சியாக்கி விடுகிறது. இப்படி தலையில் எண்ணெய் இல்லாததால் முடியானது சத்து இல்லாமல் உதிர ஆரம்பிக்கிறது. இவ்வாறெல்லாம் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஷாம்பு தயாரித்து கூந்தலை பட்டுப்போல் மென்மையாக வைக்கலாம். அப்படி வறண்ட கூந்தலுக்கு வீட்டிலேயே எப்படி ஷாம்பு தயாரிப்பது என்று பார்க்கலாமா!!!

பூந்திக்கொட்டை : இயற்கையாக முடியைத் தூய்மைப்படுத்தும் பொருள்களில் பூந்திக்கொட்டை ஒரு நல்ல மருத்துவ குணம் வாய்ந்தப் பொருள். பெரும்பாலும் இது சோப்பு, ஷாம்பு தயாரிக்கப் பயன்படுகிறது. இது தலையில் இருக்கும் பேணை அழிக்கும்.

முதலில் 5-6 பூந்திக்கொட்டையை எடுத்து நீரில் இரவிலேயே ஊற வைத்து விட வேண்டும். பின் மறுநாள் காலையில் அந்த நீரை தலைக்கு ஊற்றி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் குளிக்கவும். இதனால் முடி மட்டும் சுத்தம் ஆகாது, முடியானது மென்மையாக பட்டுப் போல் மின்னும்.

பேக்கிங் சோடா : இது ஒரு முடியைத் தூய்மைப்படுத்தும் இயற்கையான அல்கலைன். இது முடியை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், முடிக்கு வரும் பிரச்சனைகள் அனைத்தையும் வராமல் தடுக்கும்.

ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் தண்ணீரில் கலந்து தலைக்கு ஊற்றி 10-15 நிமிடம் மசாஜ் செய்யவும். இது அடர்த்தியான முடிக்கும், சுருட்டை முடிக்கும் மிகவும் நல்ல ஒரு பயனை அளிக்கும்.

வினிகர் : இரு ஒரு இயற்கையான ஹேர் கண்டிஸ்னர். 1-2 டேபிள் ஸ்பூன் வினிகரை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து 15-20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இல்லையென்றால் புளித்த ஆப்பிள் சாற்றை வைத்துக் கூட செய்யலாம். இவையெல்லாம் சிறந்த முடிக்கு ஏற்ற, எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாத கூந்தலை சுத்தப்படுத்தும் ஒரு இயற்கையான ஷாம்பு. இவ்வாறெல்லாம் செய்தால் கூந்தலானது வறண்டு போகாமல், மினமினுப்புடன், பொலிவோடு, மென்மையாக பட்டுப் போல் இருக்கும்.04 1501843706 shutterstock 181259657 07 1452141507

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button